• Apr 16 2025

வவுனியா பாடசாலையொன்றில் திருட்டு - சிசிரிவியில் சிக்கிய சிறுவன்..! பொலிஸார் தீவிர விசாரணை

Chithra / Jan 14th 2024, 12:01 pm
image

 வவுனியா தாண்டிக்குளம் பகுதி ஏ9 வீதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில்  திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி களவாடப்பட்டமை தொடர்பில் நேற்றையதினம்  கண்டறியப்பட்டமையினையடுத்து, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நேற்றையதினம் மாலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பாடசாலைக்கு இன்று  காலை விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன்,

பாடசாலைக்கு அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணோளிகளையும் பரிசோதனைக்குட்படுத்தினர்.

இதன் போதே கடந்த வெள்ளிக்கிழமை (12.01.2023) மதியம் 3.29 மணியளவில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனோருவர் தொலைக்காட்சியினை தூக்கிக்செல்வது சிசிரிவியில் பதிவாகியுள்ளது. 

சிசிரிவி காட்சியின் உதவியுடன் அவ் சிறுவனை கண்டுபிடிப்பதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளளனர்.

பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை பாதுகாவலர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


வவுனியா பாடசாலையொன்றில் திருட்டு - சிசிரிவியில் சிக்கிய சிறுவன். பொலிஸார் தீவிர விசாரணை  வவுனியா தாண்டிக்குளம் பகுதி ஏ9 வீதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில்  திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த பாடசாலையில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி களவாடப்பட்டமை தொடர்பில் நேற்றையதினம்  கண்டறியப்பட்டமையினையடுத்து, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நேற்றையதினம் மாலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.இச் சம்பவம் தொடர்பில் பாடசாலைக்கு இன்று  காலை விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன்,பாடசாலைக்கு அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணோளிகளையும் பரிசோதனைக்குட்படுத்தினர்.இதன் போதே கடந்த வெள்ளிக்கிழமை (12.01.2023) மதியம் 3.29 மணியளவில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனோருவர் தொலைக்காட்சியினை தூக்கிக்செல்வது சிசிரிவியில் பதிவாகியுள்ளது. சிசிரிவி காட்சியின் உதவியுடன் அவ் சிறுவனை கண்டுபிடிப்பதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளளனர்.பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை பாதுகாவலர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now