• Oct 29 2024

தேசிய மட்ட வலுதூக்குதல் போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவர்கள் samugammedia

Chithra / Aug 29th 2023, 4:59 pm
image

Advertisement

தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான வலுதூக்குதல் போட்டியில் வவுனியா பாடசாலை மாணவர்கள்  சாதனை படைத்துள்ளனர்.

நேற்றையதினம் (28) கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான வலுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலய மூன்று மாணவர்களும், வவுனியா இறம்பைகுளம் மகளீர் வித்தியாலய மூன்று மாணவர்களும் பங்குகொண்டு சாதனை படைத்துள்ளனர்.

குறித்த போட்டியில் வவுனியா இறம்பைகுளம் மகளீர் வித்தியாலயத்தினை சேர்ந்த கவிஜாலினி 1ஆம் இடத்தினையும், ஏ.எம் பௌலா 2ஆம் இடத்தினையும் , ஆர்.தரணியா 3ஆம் இடத்தினை பிடித்ததோடு, வவுனியா கோமரசன்குளம் மகாவித்தியாலய மாணவர்களான பி.மேரி அசெம்ரா 1ம் இடத்தையும் பா.கிசாளினி , பா.மதுசாளினி 3ம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

குறித்த மாணவர்கள்  ஞா. ஜீவன் ஆசிரியரின் பயிற்றுவிப்பில் பயிற்சி பெற்று இறம்பைகுளம் மகளீர் வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர்களான  J.D.ரெஜினோல்ட் பெரேரா,  அ.சகிதரன்  ஆகியோரும் கோமரசன்குள பயிற்றுவிப்பாளர் கி.அம்பிகா ஆகியோரின் நெறிப்படுத்தலிலும் போட்டியில் பங்குபற்றி  வெற்றியினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


தேசிய மட்ட வலுதூக்குதல் போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவர்கள் samugammedia தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான வலுதூக்குதல் போட்டியில் வவுனியா பாடசாலை மாணவர்கள்  சாதனை படைத்துள்ளனர்.நேற்றையதினம் (28) கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான வலுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலய மூன்று மாணவர்களும், வவுனியா இறம்பைகுளம் மகளீர் வித்தியாலய மூன்று மாணவர்களும் பங்குகொண்டு சாதனை படைத்துள்ளனர்.குறித்த போட்டியில் வவுனியா இறம்பைகுளம் மகளீர் வித்தியாலயத்தினை சேர்ந்த கவிஜாலினி 1ஆம் இடத்தினையும், ஏ.எம் பௌலா 2ஆம் இடத்தினையும் , ஆர்.தரணியா 3ஆம் இடத்தினை பிடித்ததோடு, வவுனியா கோமரசன்குளம் மகாவித்தியாலய மாணவர்களான பி.மேரி அசெம்ரா 1ம் இடத்தையும் பா.கிசாளினி , பா.மதுசாளினி 3ம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். குறித்த மாணவர்கள்  ஞா. ஜீவன் ஆசிரியரின் பயிற்றுவிப்பில் பயிற்சி பெற்று இறம்பைகுளம் மகளீர் வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர்களான  J.D.ரெஜினோல்ட் பெரேரா,  அ.சகிதரன்  ஆகியோரும் கோமரசன்குள பயிற்றுவிப்பாளர் கி.அம்பிகா ஆகியோரின் நெறிப்படுத்தலிலும் போட்டியில் பங்குபற்றி  வெற்றியினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement