• Nov 28 2024

இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்..?

Chithra / May 3rd 2024, 2:17 pm
image

 

இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் இல்லையென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே மற்றும் ஜூன் மாதங்களில் சந்தையில் மரக்கறிகள், பழங்கள் மற்றும் ஏனைய தானிய வகைகளின் விலை மட்டங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை,

விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கும் போதே அந்த நிறுவனம் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளது.

மே மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் கடும் மழை பெய்தால், ஜூன் மாதம் வரை மரக்கறிகளின் விலையில் சில அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்.  இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் இல்லையென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.மே மற்றும் ஜூன் மாதங்களில் சந்தையில் மரக்கறிகள், பழங்கள் மற்றும் ஏனைய தானிய வகைகளின் விலை மட்டங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை,விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கும் போதே அந்த நிறுவனம் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளது.மே மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் கடும் மழை பெய்தால், ஜூன் மாதம் வரை மரக்கறிகளின் விலையில் சில அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement