• Nov 20 2024

இலங்கையில் மீண்டும் அதிகரித்த மரக்கறிகளின் விலை - பண்டிகைக் காலத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

Chithra / Nov 19th 2024, 9:26 am
image

 

மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் கூடும் எனவும் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏலப்பருவ அறுவடை முடிவடைந்த நிலையில் சந்தையில் கிடைக்கும் மரக்கறிகளின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளமையினால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காய்கறி சில்லரை வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள், ஒரு கிலோ காய்கறிகளின் சில்லறை விலையை மொத்த விலையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பச்சை மிளகாய் ரூபா 400, முட்டைக்கோஸ் ரூபா 240, சேனைக்கிழங்கு ரூபா 450, முருங்கை ரூபா 400, ஒரு கிலோ பீன்ஸ் மற்றும் கறி மிளகாய் ஆகியவற்றின் மொத்த விலை 500 முதல் 600 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மீண்டும் அதிகரித்த மரக்கறிகளின் விலை - பண்டிகைக் காலத்தில் ஏற்படவுள்ள மாற்றம்  மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் கூடும் எனவும் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஏலப்பருவ அறுவடை முடிவடைந்த நிலையில் சந்தையில் கிடைக்கும் மரக்கறிகளின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளமையினால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்தநிலையில், காய்கறி சில்லரை வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள், ஒரு கிலோ காய்கறிகளின் சில்லறை விலையை மொத்த விலையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில், பச்சை மிளகாய் ரூபா 400, முட்டைக்கோஸ் ரூபா 240, சேனைக்கிழங்கு ரூபா 450, முருங்கை ரூபா 400, ஒரு கிலோ பீன்ஸ் மற்றும் கறி மிளகாய் ஆகியவற்றின் மொத்த விலை 500 முதல் 600 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement