• Nov 19 2024

யுத்தம் முடிந்து 15 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பு..!

Tamil nila / Mar 3rd 2024, 6:39 am
image

இலங்கையின் அண்மைய பொருளாதார முன்னேற்றம், புதிய சட்டங்களால் இருட்டடிப்பு செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையில், அடிப்படை உரிமைகள், சட்டவாட்சி, ஜனநாயக ஆட்சி மீது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் கவலையடைவதாக  அவர் தெரிவித்துள்ளார். 

நிகழ்நிலைக் காப்பு சட்டம், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம், ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம், அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான கண்காணிப்பு மற்றும் பதிவு தொடர்பான சட்டமூலம் என்பன இவற்றுள் உள்ளடங்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து இந்த வருடத்துடன் 15 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. 

எனினும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னமும் அக்கறை செலுத்தப்படாமல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 


யுத்தம் முடிந்து 15 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பு. இலங்கையின் அண்மைய பொருளாதார முன்னேற்றம், புதிய சட்டங்களால் இருட்டடிப்பு செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையில், அடிப்படை உரிமைகள், சட்டவாட்சி, ஜனநாயக ஆட்சி மீது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் கவலையடைவதாக  அவர் தெரிவித்துள்ளார். நிகழ்நிலைக் காப்பு சட்டம், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம், ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம், அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான கண்காணிப்பு மற்றும் பதிவு தொடர்பான சட்டமூலம் என்பன இவற்றுள் உள்ளடங்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து இந்த வருடத்துடன் 15 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. எனினும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னமும் அக்கறை செலுத்தப்படாமல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

Advertisement

Advertisement

Advertisement