• Jul 22 2025

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி கீதா கோபிநாத் ராஜினாமா

Chithra / Jul 22nd 2025, 10:30 am
image

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார்.

கீதா கோபிநாத்  ஆகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகி அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ளார்.

அங்கு அவர் பொருளாதாரத் துறையில் ஆரம்ப கிரிகோரி மற்றும் அனியா காஃபி பொருளாதாரப் பேராசிரியராக பணி ஆற்றவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இன்று  அறிவித்துள்ளார்.

கீதா கோபிநாத்  2019 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம்  தலைமைப் பொருளாதார நிபுணராக சர்வதேச நாணய நிதியத்தில் இணைந்தார். 

ஜனவரி 2022 ஆம் ஆண்டு முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி கீதா கோபிநாத் ராஜினாமா சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார்.கீதா கோபிநாத்  ஆகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகி அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ளார்.அங்கு அவர் பொருளாதாரத் துறையில் ஆரம்ப கிரிகோரி மற்றும் அனியா காஃபி பொருளாதாரப் பேராசிரியராக பணி ஆற்றவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இன்று  அறிவித்துள்ளார்.கீதா கோபிநாத்  2019 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம்  தலைமைப் பொருளாதார நிபுணராக சர்வதேச நாணய நிதியத்தில் இணைந்தார். ஜனவரி 2022 ஆம் ஆண்டு முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.

Advertisement

Advertisement

Advertisement