• Apr 19 2026

அமெரிக்காவில் ஜெய்சங்கர் மற்றும் அலிசன் ஹூக்கரை சந்தித்த விஜித ஹேரத்

Chithra / Sep 24th 2025, 8:31 am
image

 அமெரிக்காவில் நடைபெற்று வரும் 80ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் இடையே, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டநாள் நட்புறவையும், இரு நாடுகளுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் விஜித் ஹேரத் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, அமெரிக்க துணை வெளிவிவகார செயலாளர் அலிசன் ஹூக்கரையும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்துள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த சந்திப்பில், இலங்கை – அமெரிக்கா இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பொதுவான முன்னுரிமைகள் தொடர்பாக பயனுள்ள கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்காவில் ஜெய்சங்கர் மற்றும் அலிசன் ஹூக்கரை சந்தித்த விஜித ஹேரத்  அமெரிக்காவில் நடைபெற்று வரும் 80ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் இடையே, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டநாள் நட்புறவையும், இரு நாடுகளுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் விஜித் ஹேரத் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, அமெரிக்க துணை வெளிவிவகார செயலாளர் அலிசன் ஹூக்கரையும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்துள்ளார்.இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த சந்திப்பில், இலங்கை – அமெரிக்கா இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பொதுவான முன்னுரிமைகள் தொடர்பாக பயனுள்ள கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement