• Jan 05 2025

நிறுவனக் கோட்பாட்டு மீறல்; இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் நட்டம்

Chithra / Dec 27th 2024, 12:25 pm
image

 

நிறுவனக் கோட்பாட்டை மீறி எட்டு தொழிற்சங்கங்களுக்கு 138 திறந்த பயண அனுமதிச் சீட்டுகளை வழங்கியதால், 2023 ஆம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தொடருந்து திணைக்களத்தினால், இந்த தொழிற்சங்கங்களுக்கு 22 இலவச தொடருந்து பயண அனுமதிச் சீட்டுகளை ஒதுக்கியதன் விளைவாக, அதே ஆண்டில் அரசாங்கத்திற்கு 25 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கூறுகிறது.

நாடு முழுவதும் வழங்கப்படும் இந்த இலவச பயண அனுமதிச் சீட்டுகளை பெறுவதற்கு தொழிற்சங்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.

இருப்பினும், எட்டு தொழிற்சங்கங்களுக்கு 138 பயண அனுமதிச் சீட்டுகளை வழங்குவது அனுமதிக்கப்பட்ட வரம்பை கணிசமாக மீறிய செயல் என்றும், 

இது, கணிசமான நிதி இழப்புகளுக்கு வழிவகுத்தது என்றும் கணக்காய்வாளர் நாயகம் கண்டறிந்துள்ளார்.  

நிறுவனக் கோட்பாட்டு மீறல்; இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் நட்டம்  நிறுவனக் கோட்பாட்டை மீறி எட்டு தொழிற்சங்கங்களுக்கு 138 திறந்த பயண அனுமதிச் சீட்டுகளை வழங்கியதால், 2023 ஆம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் தொடருந்து திணைக்களத்தினால், இந்த தொழிற்சங்கங்களுக்கு 22 இலவச தொடருந்து பயண அனுமதிச் சீட்டுகளை ஒதுக்கியதன் விளைவாக, அதே ஆண்டில் அரசாங்கத்திற்கு 25 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கூறுகிறது.நாடு முழுவதும் வழங்கப்படும் இந்த இலவச பயண அனுமதிச் சீட்டுகளை பெறுவதற்கு தொழிற்சங்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.இருப்பினும், எட்டு தொழிற்சங்கங்களுக்கு 138 பயண அனுமதிச் சீட்டுகளை வழங்குவது அனுமதிக்கப்பட்ட வரம்பை கணிசமாக மீறிய செயல் என்றும், இது, கணிசமான நிதி இழப்புகளுக்கு வழிவகுத்தது என்றும் கணக்காய்வாளர் நாயகம் கண்டறிந்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement