• Apr 01 2025

கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன், மருமகன் சடலமாக மீட்பு..!

Sharmi / Dec 27th 2024, 12:27 pm
image

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் சடலங்கள்  நேற்றையதினம்(26) மாலை விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சங்கமன்கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வாகனம் நந்தராஜ், நந்தராஜின் 15 வயதுடைய மகன் மற்றும் நந்தராஜின் சகோதரியின் மகனான 17 வயதுடைய மருமகன் ஆகிய மூவருமே சடலமாக மீட்கப்பட்டனர்.

மயில்வாகனம் நந்தராஜ், நந்தராஜின் மகன் மற்றும் நந்தராஜின் சகோதிரியின் மகன் ஆகிய மூவரும் சம்பவ தினமான நேற்றுமுன்தினம் (25) மாலை நத்தார் பண்டிகையை முன்னிட்டு சங்கமன்கண்டி கடலுக்கு நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது நந்தராஜின் மகனும் மருமகனும் கடல் அலைகளில் இழுத்துச் செல்லப்பட்டதையடுத்து நந்தராஜ் அவர்களைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்த போது நந்தராஜை கடல் அலைகள் இழுத்துச் சென்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைக் கடற்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் வியாயகபுரம் மங்கமாரி கடற்கரை பகுதியில் இன்று காலையில் முதலில் 17 வயது சிறுவனின் சடலம் கரை ஒதுங்கியது.

இதனையடுத்து சிலமணி நேரத்தின் பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக இருவரது சடலமும் கரையொதுங்கியதையடுத்து சடலங்களை மீட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன், மருமகன் சடலமாக மீட்பு. திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் சடலங்கள்  நேற்றையதினம்(26) மாலை விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சங்கமன்கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வாகனம் நந்தராஜ், நந்தராஜின் 15 வயதுடைய மகன் மற்றும் நந்தராஜின் சகோதரியின் மகனான 17 வயதுடைய மருமகன் ஆகிய மூவருமே சடலமாக மீட்கப்பட்டனர்.மயில்வாகனம் நந்தராஜ், நந்தராஜின் மகன் மற்றும் நந்தராஜின் சகோதிரியின் மகன் ஆகிய மூவரும் சம்பவ தினமான நேற்றுமுன்தினம் (25) மாலை நத்தார் பண்டிகையை முன்னிட்டு சங்கமன்கண்டி கடலுக்கு நீராடச் சென்றுள்ளனர்.இதன்போது நந்தராஜின் மகனும் மருமகனும் கடல் அலைகளில் இழுத்துச் செல்லப்பட்டதையடுத்து நந்தராஜ் அவர்களைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்த போது நந்தராஜை கடல் அலைகள் இழுத்துச் சென்றுள்ளன.இதனைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைக் கடற்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் வியாயகபுரம் மங்கமாரி கடற்கரை பகுதியில் இன்று காலையில் முதலில் 17 வயது சிறுவனின் சடலம் கரை ஒதுங்கியது.இதனையடுத்து சிலமணி நேரத்தின் பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக இருவரது சடலமும் கரையொதுங்கியதையடுத்து சடலங்களை மீட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுஇது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement