• Feb 05 2025

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி - திருமலையில் விழிப்புணர்வு ஊர்வலம்

Chithra / Dec 9th 2024, 10:50 am
image


வெள்ளைப்பட்டி தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு ஊர்வலம் திருகோணமலை -கிண்ணியாவில் இன்று  இடம்பெற்றது.

இதனை திருகோணமலை பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

கிண்ணியா பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகி, பிரதான வீதி வழியாகச் சென்று மீண்டும் பஸ்தரிப்பு நிலையத்தை வந்தடைந்தது.

2030 ஆண்டிற்குள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவற்றை தடுக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும், மற்றும் பொறுப்பு கூறலை கோருவதற்கும் உலகளாவிய முயற்சிகளில் ஐ.நா. பெண்கள் அமைப்போடு நாங்களும் இணைகின்றோம் என இளைஞர்களும், யுவதிகளும் வெள்ளைப்பட்டி அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி - திருமலையில் விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளைப்பட்டி தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு ஊர்வலம் திருகோணமலை -கிண்ணியாவில் இன்று  இடம்பெற்றது.இதனை திருகோணமலை பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.கிண்ணியா பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகி, பிரதான வீதி வழியாகச் சென்று மீண்டும் பஸ்தரிப்பு நிலையத்தை வந்தடைந்தது.2030 ஆண்டிற்குள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவற்றை தடுக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும், மற்றும் பொறுப்பு கூறலை கோருவதற்கும் உலகளாவிய முயற்சிகளில் ஐ.நா. பெண்கள் அமைப்போடு நாங்களும் இணைகின்றோம் என இளைஞர்களும், யுவதிகளும் வெள்ளைப்பட்டி அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement