• Dec 02 2024

Anaath / Aug 14th 2024, 1:12 pm
image

இங்கிலாந்தில்  நடன வகுப்பை முடித்து வெளியே வந்த சிறுமிகள் மீது மர்ம நபர் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியதில் 3 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர் 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 இங்கிலாந்தின் வட மேற்கு பகுதியில் உள்ள சவுத்போர்ட்[Southport] நகரில் கடந்த ஜூலை 29 ஆம் இடம்பெற்றுள்ளது

அன்றைய தினம்  நடன வகுப்பை முடித்து வெளியே வந்த சிறுமிகள் மீது மர்ம நபர் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியதில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர். அத்துடன் 10 சிறுமிகள் கத்திக்குத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமிகளை தாக்கிய 17 வயது இங்கிலாந்து சிறுவன் பிடிபட்ட நிலையில் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

இந்நிலையில் அந்நாட்டின் தீவிர வலதுசாரி அமைப்புகள், நாட்டில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினர்.

நாடு முழுக்க ஆசியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு சமூக வலைதளங்களின் மூலம் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இதனால் இந்தியர்கள் உட்பட அங்கு குடியேறியுள்ளவர்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் பொதுவெளியில் உலா வந்தது. வதந்திகள் மூலம் வெறுப்பைப் பரப்பும் வலதுசாரி அமைப்புகளை பிரதமர் கெயர் ஸ்டார்மர் எச்சரித்தார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த கலவரத்தை இங்கிலாந்து போலீசார் கட்டுப்படுத்தியுள்ளனர் 

நாடு முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்ட, இணையத்தில் இனவெறி கருத்துக்களையும் வெறுப்பையும் பரப்பிய, கலவரத்தோடு தொடர்புடைய சுமார் 1000 பேரை இங்கிலாந்து போலீஸ் கைது செய்துள்ளது. அவர்களில் சுமார் 575 ஓர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவு ள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்




இங்கிலாந்தில் வன்முறை - 1000 பேர் கைது இங்கிலாந்தில்  நடன வகுப்பை முடித்து வெளியே வந்த சிறுமிகள் மீது மர்ம நபர் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியதில் 3 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இங்கிலாந்தின் வட மேற்கு பகுதியில் உள்ள சவுத்போர்ட்[Southport] நகரில் கடந்த ஜூலை 29 ஆம் இடம்பெற்றுள்ளதுஅன்றைய தினம்  நடன வகுப்பை முடித்து வெளியே வந்த சிறுமிகள் மீது மர்ம நபர் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியதில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர். அத்துடன் 10 சிறுமிகள் கத்திக்குத்தில் படுகாயமடைந்துள்ளனர்.இந்நிலையில் சிறுமிகளை தாக்கிய 17 வயது இங்கிலாந்து சிறுவன் பிடிபட்ட நிலையில் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.இந்நிலையில் அந்நாட்டின் தீவிர வலதுசாரி அமைப்புகள், நாட்டில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினர்.நாடு முழுக்க ஆசியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு சமூக வலைதளங்களின் மூலம் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இதனால் இந்தியர்கள் உட்பட அங்கு குடியேறியுள்ளவர்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் பொதுவெளியில் உலா வந்தது. வதந்திகள் மூலம் வெறுப்பைப் பரப்பும் வலதுசாரி அமைப்புகளை பிரதமர் கெயர் ஸ்டார்மர் எச்சரித்தார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த கலவரத்தை இங்கிலாந்து போலீசார் கட்டுப்படுத்தியுள்ளனர் நாடு முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்ட, இணையத்தில் இனவெறி கருத்துக்களையும் வெறுப்பையும் பரப்பிய, கலவரத்தோடு தொடர்புடைய சுமார் 1000 பேரை இங்கிலாந்து போலீஸ் கைது செய்துள்ளது. அவர்களில் சுமார் 575 ஓர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவு ள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement