• Aug 19 2025

6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களின் விசாக்கள் ரத்து - அமெரிக்கா அதிரடி!

shanuja / Aug 19th 2025, 9:40 am
image

அமெரிக்க சட்டத்தை மீறியதாலும், அதிக காலம் நாட்டில் தங்கியிருப்பதாலும் 6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

ஜனவரி முதல் ஆயிரக்கணக்கான மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


ட்ரம்ப் நிர்வாகம், குடியேற்றம் மற்றும் சர்வதேச மாணவர்கள் மீதான அடக்குமுறையைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை மாணவர் விசாவை ரத்து செய்யும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிக்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச மாணவர்களுக்கான விசா நியமனங்களை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களின் விசாக்கள் ரத்து - அமெரிக்கா அதிரடி அமெரிக்க சட்டத்தை மீறியதாலும், அதிக காலம் நாட்டில் தங்கியிருப்பதாலும் 6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனவரி முதல் ஆயிரக்கணக்கான மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.ட்ரம்ப் நிர்வாகம், குடியேற்றம் மற்றும் சர்வதேச மாணவர்கள் மீதான அடக்குமுறையைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மாணவர் விசாவை ரத்து செய்யும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிக்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச மாணவர்களுக்கான விசா நியமனங்களை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement