• Sep 21 2024

விசாக பூரணை தின சந்திரகிரகணம்- இலங்கை மக்கள் தற்பொழுது பார்க்க முடியும்!samugammedia

Tamil nila / May 5th 2023, 10:18 pm
image

Advertisement

விசாக பூரணை தினத்தில், சந்திரகிரகணம் இலங்கை மக்களுக்கு காணக்கூடியதாக இருக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இன்றிரவு 08.44 அளவில் குறித்த சந்திரகிரகணம் ஆரம்பமாகி குறைவான இருண்ட நிழலில் சந்திரன் பிரவேசித்து நாளை சனிக்கிழமை அதிகாலை 01.01 மணிக்கு முடிவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கதிரவனின் ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் சந்திரன் கடந்து செல்லும் போது பூரணை தினங்களில் சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன.

இதன் விளைவாக சூரியனின் சில அல்லது அனைத்து ஒளியும் சந்திரனை அடைவதில் தடை ஏற்படுகிறது.

இந்த கிரகணம் இன்று நள்ளிரவிற்கும், நாளைக்கும் இடையில் நிகழும் ஒரு தெளிவற்ற சந்திர கிரகணமாகும்.

முழுமையான சந்திரகிரகணம் இன்றிரவு 10.52க்கு நிகழுமென பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

விசாக பூரணை தின சந்திரகிரகணம்- இலங்கை மக்கள் தற்பொழுது பார்க்க முடியும்samugammedia விசாக பூரணை தினத்தில், சந்திரகிரகணம் இலங்கை மக்களுக்கு காணக்கூடியதாக இருக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.இன்றிரவு 08.44 அளவில் குறித்த சந்திரகிரகணம் ஆரம்பமாகி குறைவான இருண்ட நிழலில் சந்திரன் பிரவேசித்து நாளை சனிக்கிழமை அதிகாலை 01.01 மணிக்கு முடிவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.கதிரவனின் ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் சந்திரன் கடந்து செல்லும் போது பூரணை தினங்களில் சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன.இதன் விளைவாக சூரியனின் சில அல்லது அனைத்து ஒளியும் சந்திரனை அடைவதில் தடை ஏற்படுகிறது.இந்த கிரகணம் இன்று நள்ளிரவிற்கும், நாளைக்கும் இடையில் நிகழும் ஒரு தெளிவற்ற சந்திர கிரகணமாகும்.முழுமையான சந்திரகிரகணம் இன்றிரவு 10.52க்கு நிகழுமென பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement