• Nov 18 2026

சாவகச்சேரியில் காண்பியல் கண்காட்சி!

Ziya / Nov 17th 2026, 2:34 pm
image

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடாத்திய "காண்பியல் கூடம்" கண்காட்சி, யாழ்ப்பாணம் சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.


வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.


மேலும் இந்த நிகழ்வில் பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாவட்ட பணிப்பாளர்,பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


கண்காட்சியில் பழமையான பாவனைப் பொருட்கள், சிற்பங்கள், ஓவியங்கள், சித்திரங்கள், புத்தகங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருந் தன.


இந்தக் கண்காட்சி இன்றும் நாளையும் காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 4.00 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சாவகச்சேரியில் காண்பியல் கண்காட்சி வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடாத்திய "காண்பியல் கூடம்" கண்காட்சி, யாழ்ப்பாணம் சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் இன்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.மேலும் இந்த நிகழ்வில் பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாவட்ட பணிப்பாளர்,பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.கண்காட்சியில் பழமையான பாவனைப் பொருட்கள், சிற்பங்கள், ஓவியங்கள், சித்திரங்கள், புத்தகங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருந் தன.இந்தக் கண்காட்சி இன்றும் நாளையும் காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 4.00 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement