தமிழ் தேசியம் சார்ந்து ஒற்றுமையுடன் ஓர் அணியில் பயணிக்கும் கூட்டணி கட்சிகளுக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரும் ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளருமான குருசாமி சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ் நகரப் பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு கேட்டு கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒற்றுமையுடன் பயணித்த தமிழ் கட்சிகள் தமிழரசு கட்சியின் எதேச்சை அதிகாரத்தினால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறு செயல்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இதற்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரிந்த விடயமாக உள்ள நிலையில் அவரும் தற்போது பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி சார்ந்து போட்டியிடுகிறார்.
தற்போது தேர்தலைப் பொறுத்தவரை யார் தேர்தலில் தொகுதியில் பல சுயேச்சை குழுக்கள் தென் இலங்கையின் நிகழ்ச்சி நிரலின் கீழ் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது.
அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள் தமது அரசியல் நீதியான அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் நிலையில் சிலர் அதற்கு விரோதமாக செயற்பட்டு கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறு விரோதமாக செயல்படும் தமிழ் தேசியம் சார்ந்த காட்சிகளை தமிழ் மக்கள் இனம் கண்டு இந்த முறை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.
இவர்களை தோற்கடிக்காமல் விட்டால் தமிழ் மக்களை தமது சொந்த அரசியலுக்காக தெற்கு அரசியலுக்கு பேரம் பேசி பல கோடிகளை பெறுவார்கள் அல்லது அமைச்சர் பதவிகளை பெறுவார்கள்.
ஆகவே, தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் தெளிவாகவும் அவதானமாகவும் செயற்பாட்டு தமிழ் தேசிய சார்ந்து பயணிப்பவர்களை மட்டும் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் தேசியம் சார்ந்த கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள்- வேட்பாளர் சுரேன் கோரிக்கை. தமிழ் தேசியம் சார்ந்து ஒற்றுமையுடன் ஓர் அணியில் பயணிக்கும் கூட்டணி கட்சிகளுக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரும் ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளருமான குருசாமி சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாழ் நகரப் பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு கேட்டு கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒற்றுமையுடன் பயணித்த தமிழ் கட்சிகள் தமிழரசு கட்சியின் எதேச்சை அதிகாரத்தினால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறு செயல்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இதற்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரிந்த விடயமாக உள்ள நிலையில் அவரும் தற்போது பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி சார்ந்து போட்டியிடுகிறார். தற்போது தேர்தலைப் பொறுத்தவரை யார் தேர்தலில் தொகுதியில் பல சுயேச்சை குழுக்கள் தென் இலங்கையின் நிகழ்ச்சி நிரலின் கீழ் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது.அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள் தமது அரசியல் நீதியான அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் நிலையில் சிலர் அதற்கு விரோதமாக செயற்பட்டு கொண்டிருக்கின்றனர். அவ்வாறு விரோதமாக செயல்படும் தமிழ் தேசியம் சார்ந்த காட்சிகளை தமிழ் மக்கள் இனம் கண்டு இந்த முறை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.இவர்களை தோற்கடிக்காமல் விட்டால் தமிழ் மக்களை தமது சொந்த அரசியலுக்காக தெற்கு அரசியலுக்கு பேரம் பேசி பல கோடிகளை பெறுவார்கள் அல்லது அமைச்சர் பதவிகளை பெறுவார்கள். ஆகவே, தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் தெளிவாகவும் அவதானமாகவும் செயற்பாட்டு தமிழ் தேசிய சார்ந்து பயணிப்பவர்களை மட்டும் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.