• Nov 17 2024

கேஸ் சிலிண்டரைத் தவிர வேறு சின்னங்களுக்கு வாக்களித்தால் வளமான எதிர்காலம் பாளாகிவிடும் - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Tamil nila / Sep 13th 2024, 8:11 pm
image

திசைகாட்டிக்கு ஒருமுறை கொடுத்துப் பார்ப்போம் என்பது இது ஒன்றும் விளையாட்டல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, சிலிண்டர் சின்னத்தை தவிர, வேறு சின்னங்களுக்கு வாக்களித்து வளமான உங்கள் எதிர்காலத்தை பாலாக்கி விடாதீர்கள் என்றும் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (13) கொழும்பு - புத்தளம் முகத்திடலில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

எமது புதிய அரசாங்கத்தில் புத்தளம் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து, நுரைச்சோலை பொருளாதார சந்தையையும் அபிவிருத்தி செய்து மீன்பிடி, விவசாயம் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் அபிவிருத்தி செய்து தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும்.

நாட்டைப் பொறுப்பெடுக்க முடியாமல் பின்னால் ஓடியவர்கள், இன்று நாட்டை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்கிறார்கள். நாடு இருக்கும் நிலையை விட மேலும் அபிவிருத்தி செய்யப் போவதாகவும் மக்கள் மத்தியில் கூறி வருகிறார்கள்.

இவர்களிடம் நாட்டை பொறுப்புக் கொடுத்தால், இந்த நாடு இருக்கும் நிலையை விட மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்பதை இந்த நாட்டு மக்கள் மிகவும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். 

ஐ.எப்.எம். எமக்கு வழங்கிய நிபந்தனைகளை நாம. முறையாக பின்பற்றியமையால்தான் , மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட இந்த நாட்டை எம்மால் காப்பாற்ற முடிந்தது. 

டொலரின் பெறுமதி குறைந்தது. இலங்கை ரூபாயின் பெறுமதியில் குறைவு காணப்பட்டது. வரிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, பெற்றோல், கேஸ் உள்ளிட்ட பொருட்களின் விலைகளையும் குறைக்க முடிந்தது. 

பொதுமக்களுக்கு அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தி முன்பு வழங்கிய உதவித் தொகையையும் விட உதவித் தொகையை அதிகரித்துக் கொடுத்தோம்.

தனிநபர் வருமானம் அதிகரிக்கப்பட்டதுடன், அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரித்துக் கொடுக்க முடிந்தது.

இந்த நாடு இருக்கும் நிலையை விடவும் மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. பல தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும். சுற்றுலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிப்பதன் மூலம் நாடு மேலும் முன்னேற்றம் அடையும்.

உறுமய, அஸ்வெசும போன்ற திட்டங்களை மேலும் விருத்தி செய்து, கல்வி, சுகாதார, விவசாயம், மீன்பிடி உள்ளிட்டவற்றையும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

ஒவ்வொரு கிராமங்களில் வாழும் மக்கள் சிறந்த வருமானத்தை ஈட்டுவதற்கும், கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கும் நாம் திட்டமிட்டிருக்கிறோம். இந்த நாடு இன்னும் புதிய அபிவிருத்திகளை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது.

பொருட்களின் விலைகளை குறைத்து, தனிநபர் மற்றும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் திட்டிமிட்டிருக்கிறோம்.

பொருளாதார ரீதியாக இந்த நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த போது, என்னால் முடியும் என்ற நம்பக்கையில்தான் இந்த நாட்டை பொறுப்பேற்றேன்.

கடந்த இரண்டு வருடங்களில்  எல்லோரும் வியந்து பார்க்கும் அளவுக்கு நாட்டின் தலையெழுத்தை மாற்றியமைத்தோம். முன்னர் நீங்கள் எப்படி இருந்தீர்கள், இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். எனவே, இந்த நாட்டை மேலும் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்காக கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களியுங்கள். மாற்றமாக வேறு சின்னத்திற்கு வாக்களித்தால் அடுத்த நாள் முதல் இந்த நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கியே நகர ஆரம்பிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

திசை காட்டிக்கு ஒரு முறை சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்போம் என சிலர் சொல்வதை அவதானித்தேன். இந்த நாடு இப்போதுதான் வீழ்ச்சியில் இருந்து மேல் நோக்கி எழுந்து வருகிறது. டொலரின் பெறுமதி குறைந்துள்ளது. பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள், இளைஞர், யுவதிகளின் எதிர்காலம் ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறது.

திசை காட்டிக்கு உங்கள் வாக்குகளை அளித்து இவை அனைத்தும் நாசமாக்கி விடாதீர்கள். ஒரு முறை சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்போம் என்று கூறுவதானது உங்களதும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் பெரும் சவாலாகி விடும்.

திசை காட்டி சின்னத்திற்கு ஒரு முறையான பொருளாதார கொள்கை கிடையாது. அவர்களது பொருளாதார கொள்கையால் இந்த நாடு முன்னேற்றம் அடைய முடியாது. அவர்களின் பொருளாதார கொள்கை ஐ.எப்.எம். இன் நிபந்தனைகளுக்கு முற்றாக முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது.

நாங்கள் ஐ.எப்.எம். வழங்கிய நிபந்தனைகளை சரியாக கடைப்பிடித்தோம். அதனால்தான் எமக்கு பொருளாதார ரீதியாக காணப்பட சவால்களை கட்டுப்படுத்த முடிந்தது என்றார்.

கேஸ் சிலிண்டரைத் தவிர வேறு சின்னங்களுக்கு வாக்களித்தால் வளமான எதிர்காலம் பாளாகிவிடும் - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு திசைகாட்டிக்கு ஒருமுறை கொடுத்துப் பார்ப்போம் என்பது இது ஒன்றும் விளையாட்டல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, சிலிண்டர் சின்னத்தை தவிர, வேறு சின்னங்களுக்கு வாக்களித்து வளமான உங்கள் எதிர்காலத்தை பாலாக்கி விடாதீர்கள் என்றும் கூறினார்.ஜனாதிபதித் தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (13) கொழும்பு - புத்தளம் முகத்திடலில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,எமது புதிய அரசாங்கத்தில் புத்தளம் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து, நுரைச்சோலை பொருளாதார சந்தையையும் அபிவிருத்தி செய்து மீன்பிடி, விவசாயம் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் அபிவிருத்தி செய்து தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும்.நாட்டைப் பொறுப்பெடுக்க முடியாமல் பின்னால் ஓடியவர்கள், இன்று நாட்டை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்கிறார்கள். நாடு இருக்கும் நிலையை விட மேலும் அபிவிருத்தி செய்யப் போவதாகவும் மக்கள் மத்தியில் கூறி வருகிறார்கள்.இவர்களிடம் நாட்டை பொறுப்புக் கொடுத்தால், இந்த நாடு இருக்கும் நிலையை விட மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்பதை இந்த நாட்டு மக்கள் மிகவும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஐ.எப்.எம். எமக்கு வழங்கிய நிபந்தனைகளை நாம. முறையாக பின்பற்றியமையால்தான் , மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட இந்த நாட்டை எம்மால் காப்பாற்ற முடிந்தது. டொலரின் பெறுமதி குறைந்தது. இலங்கை ரூபாயின் பெறுமதியில் குறைவு காணப்பட்டது. வரிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, பெற்றோல், கேஸ் உள்ளிட்ட பொருட்களின் விலைகளையும் குறைக்க முடிந்தது. பொதுமக்களுக்கு அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தி முன்பு வழங்கிய உதவித் தொகையையும் விட உதவித் தொகையை அதிகரித்துக் கொடுத்தோம்.தனிநபர் வருமானம் அதிகரிக்கப்பட்டதுடன், அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரித்துக் கொடுக்க முடிந்தது.இந்த நாடு இருக்கும் நிலையை விடவும் மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. பல தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும். சுற்றுலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிப்பதன் மூலம் நாடு மேலும் முன்னேற்றம் அடையும்.உறுமய, அஸ்வெசும போன்ற திட்டங்களை மேலும் விருத்தி செய்து, கல்வி, சுகாதார, விவசாயம், மீன்பிடி உள்ளிட்டவற்றையும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.ஒவ்வொரு கிராமங்களில் வாழும் மக்கள் சிறந்த வருமானத்தை ஈட்டுவதற்கும், கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கும் நாம் திட்டமிட்டிருக்கிறோம். இந்த நாடு இன்னும் புதிய அபிவிருத்திகளை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது.பொருட்களின் விலைகளை குறைத்து, தனிநபர் மற்றும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் திட்டிமிட்டிருக்கிறோம்.பொருளாதார ரீதியாக இந்த நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த போது, என்னால் முடியும் என்ற நம்பக்கையில்தான் இந்த நாட்டை பொறுப்பேற்றேன்.கடந்த இரண்டு வருடங்களில்  எல்லோரும் வியந்து பார்க்கும் அளவுக்கு நாட்டின் தலையெழுத்தை மாற்றியமைத்தோம். முன்னர் நீங்கள் எப்படி இருந்தீர்கள், இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். எனவே, இந்த நாட்டை மேலும் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்காக கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களியுங்கள். மாற்றமாக வேறு சின்னத்திற்கு வாக்களித்தால் அடுத்த நாள் முதல் இந்த நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கியே நகர ஆரம்பிக்கும் என்பதில் சந்தேகமில்லை.திசை காட்டிக்கு ஒரு முறை சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்போம் என சிலர் சொல்வதை அவதானித்தேன். இந்த நாடு இப்போதுதான் வீழ்ச்சியில் இருந்து மேல் நோக்கி எழுந்து வருகிறது. டொலரின் பெறுமதி குறைந்துள்ளது. பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள், இளைஞர், யுவதிகளின் எதிர்காலம் ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறது.திசை காட்டிக்கு உங்கள் வாக்குகளை அளித்து இவை அனைத்தும் நாசமாக்கி விடாதீர்கள். ஒரு முறை சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்போம் என்று கூறுவதானது உங்களதும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் பெரும் சவாலாகி விடும்.திசை காட்டி சின்னத்திற்கு ஒரு முறையான பொருளாதார கொள்கை கிடையாது. அவர்களது பொருளாதார கொள்கையால் இந்த நாடு முன்னேற்றம் அடைய முடியாது. அவர்களின் பொருளாதார கொள்கை ஐ.எப்.எம். இன் நிபந்தனைகளுக்கு முற்றாக முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது.நாங்கள் ஐ.எப்.எம். வழங்கிய நிபந்தனைகளை சரியாக கடைப்பிடித்தோம். அதனால்தான் எமக்கு பொருளாதார ரீதியாக காணப்பட சவால்களை கட்டுப்படுத்த முடிந்தது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement