• Nov 28 2024

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு யாழில் நடைபயணம்...!samugammedia

Sharmi / Jan 27th 2024, 12:22 pm
image

சர்வதேச ஈரநில தினத்தை முன்னிட்டு (Feb-02)  எதிர்காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகமும், சிறகுகள் அமையமும் இணைந்து பாடசாலை மாணவருக்கான 'ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணம்' இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர் ம.சசிகரனின் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது செம்மணி பிரதேசத்தில் அமைந்துள்ள ஈரநிலப் பிரதேசத்தினுள் மாணவர் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்கள் ஈரநிலத்தில் வாழும் சிற்றுயிர்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என்பவற்றை அவதானிக்க புலமை மிக்க வளவாளர்களால் வழிகாட்டல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இங்கு மாணவருக்கு ஈரநிலங்களின் முக்கியத்துவம், ஈரநிலங்கள் பாதுகாக்கப்படலில் ஒவ்வொரு தனி மனிதனதும் பங்களிப்பு என்பனவும் எடுத்துக் கூறப்பட்டது.

இவ் ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணத்தில் மாணவர்கள் மட்டுமன்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வயது வேறுபாடின்றி மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியதையும் அவதானிக்க முடிந்தது.



உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு யாழில் நடைபயணம்.samugammedia சர்வதேச ஈரநில தினத்தை முன்னிட்டு (Feb-02)  எதிர்காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகமும், சிறகுகள் அமையமும் இணைந்து பாடசாலை மாணவருக்கான 'ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணம்' இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர் ம.சசிகரனின் தலைமையில் நடைபெற்றது.இதன் போது செம்மணி பிரதேசத்தில் அமைந்துள்ள ஈரநிலப் பிரதேசத்தினுள் மாணவர் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்கள் ஈரநிலத்தில் வாழும் சிற்றுயிர்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என்பவற்றை அவதானிக்க புலமை மிக்க வளவாளர்களால் வழிகாட்டல்கள் மேற்கொள்ளப்பட்டன.இங்கு மாணவருக்கு ஈரநிலங்களின் முக்கியத்துவம், ஈரநிலங்கள் பாதுகாக்கப்படலில் ஒவ்வொரு தனி மனிதனதும் பங்களிப்பு என்பனவும் எடுத்துக் கூறப்பட்டது.இவ் ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணத்தில் மாணவர்கள் மட்டுமன்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வயது வேறுபாடின்றி மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியதையும் அவதானிக்க முடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement