குறைந்தபட்ச வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் மோசடியான வேலைவாய்ப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு எச்சரித்துள்ளது.
மோசடி செய்பவர்கள், போலியான விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் பொது மக்களை குறிவைப்பது அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்பு என்ற பெயரில் பதிவு கட்டணம் அல்லது வைப்புத்தொகையை கோருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் மோசடி வலையில் விழுந்தவுடன் குறித்த பணத்தை இழக்க நேரிடும்.
தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் அல்லது சில சந்தர்ப்பங்களில், மனித கடத்தலுக்கு பலியாகும் அபாயம் உள்ளது என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், இதுபோன்ற மோசடிகளை அடையாளம் காண்பது மற்றும் ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது குறித்து குடிமக்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு சமூக ஊடக தளங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது.
போலியான வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து எச்சரிக்கை குறைந்தபட்ச வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் மோசடியான வேலைவாய்ப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு எச்சரித்துள்ளது.மோசடி செய்பவர்கள், போலியான விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் பொது மக்களை குறிவைப்பது அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இவர்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்பு என்ற பெயரில் பதிவு கட்டணம் அல்லது வைப்புத்தொகையை கோருகின்றனர்.பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் மோசடி வலையில் விழுந்தவுடன் குறித்த பணத்தை இழக்க நேரிடும்.தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் அல்லது சில சந்தர்ப்பங்களில், மனித கடத்தலுக்கு பலியாகும் அபாயம் உள்ளது என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு எச்சரித்துள்ளது.இதற்கிடையில், இதுபோன்ற மோசடிகளை அடையாளம் காண்பது மற்றும் ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது குறித்து குடிமக்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு சமூக ஊடக தளங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது.