பதிவு செய்யாமல் வற் வரியை நுகர்வோரிடமிருந்து அறவிடும் நிறுவனங்களைக் கண்டறிய இறைவரி திணைக்களம் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
இறைவரி திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுளின் அடிப்பமையில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வற் வரிக்காக பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அவர்களின் வற் பதிவு எண்ணை நுகர்வோரின் பார்வைக்குக் காண்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு செயற்படாத வர்த்தக நிறுவனங்கள் தொடர்பில் இறைவரித் திணைக்கள ஆணையாளருக்கு வாடிக்கையாளர்கள் நேரடியாகவே முறைப்பாடு செய்யலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பதிவு செய்யாமல் நுகர்வோரிடமிருந்து வற் வரியை அறவிடும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை. பதிவு செய்யாமல் வற் வரியை நுகர்வோரிடமிருந்து அறவிடும் நிறுவனங்களைக் கண்டறிய இறைவரி திணைக்களம் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.இறைவரி திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுளின் அடிப்பமையில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.வற் வரிக்காக பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அவர்களின் வற் பதிவு எண்ணை நுகர்வோரின் பார்வைக்குக் காண்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என அவர் கூறியுள்ளார்.இவ்வாறு செயற்படாத வர்த்தக நிறுவனங்கள் தொடர்பில் இறைவரித் திணைக்கள ஆணையாளருக்கு வாடிக்கையாளர்கள் நேரடியாகவே முறைப்பாடு செய்யலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.