• Sep 17 2024

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.!!

Tamil nila / Feb 18th 2024, 9:14 pm
image

Advertisement

தெல்தெனிய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் 12 வயதுடைய மாணவர் ஒருவருக்கு பாடசாலையின் கணினியில் ஆபாசப்படங்களை காண்பித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான ஆசிரியர் இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

12 வயது மாணவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், அதே பள்ளியில் அழகியல் பாடம் கற்பிக்கும் 53 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயது சிறுமி ஒருவரை சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவந்ததாக கூறப்படும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தலை மன்னார் வடக்கு பகுதியில் பாலியல் துன்புறுத்தலின் பின்னர் பத்து வயது சிறுமி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபரை காவல்துறையினர் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தலை மேற்கொள்பவர்களை கண்டறிவதற்கான கடமையில் ஈடுபட்டிருந்த பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்த முயன்ற தனியார் நிறுவன பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நுவரெலியா நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர், வெலிமடை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இது தொடர்பில் காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜயசுந்தர பெற்றோருக்கு அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.

நாளாந்தம் நாட்டின் ஏதேனுமொரு பகுதியில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தமது பிள்ளைகளை பிறிதொரு நபரிடம் ஒப்படைத்துவிட்டு, தொழிலுக்கு அல்லது வேறு ஏதேனும் அலுவல்களுக்காக செல்லும்போது, பிள்ளையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜயசுந்தர பெற்றோரிடம் கோரியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. தெல்தெனிய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் 12 வயதுடைய மாணவர் ஒருவருக்கு பாடசாலையின் கணினியில் ஆபாசப்படங்களை காண்பித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபரான ஆசிரியர் இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.12 வயது மாணவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், அதே பள்ளியில் அழகியல் பாடம் கற்பிக்கும் 53 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.15 வயது சிறுமி ஒருவரை சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவந்ததாக கூறப்படும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.தலை மன்னார் வடக்கு பகுதியில் பாலியல் துன்புறுத்தலின் பின்னர் பத்து வயது சிறுமி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபரை காவல்துறையினர் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தலை மேற்கொள்பவர்களை கண்டறிவதற்கான கடமையில் ஈடுபட்டிருந்த பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்த முயன்ற தனியார் நிறுவன பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் நுவரெலியா நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கைதான சந்தேகநபர், வெலிமடை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கடந்த சில தினங்களாக சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இது தொடர்பில் காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜயசுந்தர பெற்றோருக்கு அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.நாளாந்தம் நாட்டின் ஏதேனுமொரு பகுதியில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் தமது பிள்ளைகளை பிறிதொரு நபரிடம் ஒப்படைத்துவிட்டு, தொழிலுக்கு அல்லது வேறு ஏதேனும் அலுவல்களுக்காக செல்லும்போது, பிள்ளையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜயசுந்தர பெற்றோரிடம் கோரியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement