மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மதியம் முதல் கனத்த மழை பெய்து வருகிறது .
தற்போது பெய்யும் மழை தொடரும் பட்சத்தில் மரே தோட்டத்தில் வெடிப்பு ஏற்பட்டு உள்ள பகுதி தால் இரங்க அதிக அளவு வாய்ப்பு உள்ளது.
கன மழை காரணமாக நீர் தேக்க பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல காசல்ரீ விமலசுரேந்திர மவுஸ்சாகலை நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
காட்மோர் ஓயா ,சியத்தகங்குல ஓயா, சாமிமலை ஓயா ,மறே நீர்வீழ்ச்சி, லக்சபான நீர் வீழ்ச்சி, மோகினி எல்லை நீர் வீழ்ச்சி ,காட்மோர் நீர்வீழ்ச்சி மற்றும் ஓடைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
அத்துடன் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நுவரெலியாவில் தொடரும் மழையால் மக்களுக்கு எச்சரிக்கை மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மதியம் முதல் கனத்த மழை பெய்து வருகிறது .தற்போது பெய்யும் மழை தொடரும் பட்சத்தில் மரே தோட்டத்தில் வெடிப்பு ஏற்பட்டு உள்ள பகுதி தால் இரங்க அதிக அளவு வாய்ப்பு உள்ளது.கன மழை காரணமாக நீர் தேக்க பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.குறிப்பாக லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல காசல்ரீ விமலசுரேந்திர மவுஸ்சாகலை நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.காட்மோர் ஓயா ,சியத்தகங்குல ஓயா, சாமிமலை ஓயா ,மறே நீர்வீழ்ச்சி, லக்சபான நீர் வீழ்ச்சி, மோகினி எல்லை நீர் வீழ்ச்சி ,காட்மோர் நீர்வீழ்ச்சி மற்றும் ஓடைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.அத்துடன் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் பனி மூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.