• Oct 15 2026

ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதா? சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு!

dorin / Oct 14th 2026, 4:14 pm
image

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடை சிறைச்சாலையினுள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

சிறைச்சாலை விதிகளின்படி அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிறைச்சாலைகள் ஆணையாளரும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளருமான சேனக்க பல்லேதென்ன,"அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எங்களுக்கு எந்தப் முறைப்பாடும் கிடைக்கவில்லை; அது குறித்து எங்களுக்குத் தெரியாது... சிறைச்சாலைத் திணைக்களத்தின் விதிமுறைகளின்படி அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை..." எனக் குறிப்பிட்டார்.


ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதா சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடை சிறைச்சாலையினுள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.சிறைச்சாலை விதிகளின்படி அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிறைச்சாலைகள் ஆணையாளரும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளருமான சேனக்க பல்லேதென்ன,"அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எங்களுக்கு எந்தப் முறைப்பாடும் கிடைக்கவில்லை; அது குறித்து எங்களுக்குத் தெரியாது. சிறைச்சாலைத் திணைக்களத்தின் விதிமுறைகளின்படி அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை." எனக் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement