• Feb 27 2026

அரசியல் பிரபலங்களைக் காப்பாற்ற மதுஷ் திட்டமிட்டுக் கொல்லப்பட்டாரா? - மீண்டும் விசாரணை

Chithra / Feb 25th 2026, 7:23 pm
image

பாதாள உலகக் குழுவின் தலைவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான மாக்கந்துரே மதுஷ், பொலிஸ் காவலில் இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி அதிகாலை, கொழும்பு - மாளிகாவத்தை அரச அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் வைத்து மதுஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கிராம் ஹெரோயினை மீட்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு ஒளிந்திருந்த எதிர்த்தரப்புக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்தார் என்று அப்போதைய பொலிஸ் தரப்பு அறிவித்தது.


இருப்பினும், பலத்த பாதுகாப்பு மற்றும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் இருந்த மதுஷ் மீது மட்டும் எவ்வாறு துல்லியமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது? என்பது இன்றும் விடைதெரியாத கேள்வியாகவே உள்ளது.


டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மதுஷ், 18 மாதங்கள் சி.ஐ.டி. காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். அந்தச் சோதனைகளின் போது, சுமார் 80 இற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் சில அமைச்சர்களுடன் அவருக்கு இருந்த நெருக்கமான தொடர்புகள் குறித்த தகவல்கள் கசிந்தன.


இதனைத் தொடர்ந்து, விசாரணைகளை முன்னெடுத்த ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதும், மதுஷ் திடீரென கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதும் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தின.


மதுஷுடன் தொடர்புடைய அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் பாதுகாப்பதற்காகவே இந்த "திட்டமிட்ட கொலை" அரங்கேற்றப்பட்டது என்று சிவில் அமைப்புகள் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வந்தன.


ஐந்து ஆண்டுகள் கடந்தும் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மதுஷின் குடும்பத்தினர் மற்றும் சிவில் அமைப்புகளின் கோரிக்கைக்கு இணங்க தற்போது விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


இந்தப் புதிய விசாரணையின் மூலம், மதுஷின் போதைப்பொருள் வலையமைப்பில் இருந்த அரசியல் புள்ளிகள் யார்? மற்றும் அவரது கோடிக்கணக்கான பெறுமதியான சொத்துக்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன? போன்ற உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசியல் பிரபலங்களைக் காப்பாற்ற மதுஷ் திட்டமிட்டுக் கொல்லப்பட்டாரா - மீண்டும் விசாரணை பாதாள உலகக் குழுவின் தலைவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான மாக்கந்துரே மதுஷ், பொலிஸ் காவலில் இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி அதிகாலை, கொழும்பு - மாளிகாவத்தை அரச அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் வைத்து மதுஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். மறைத்து வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கிராம் ஹெரோயினை மீட்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு ஒளிந்திருந்த எதிர்த்தரப்புக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்தார் என்று அப்போதைய பொலிஸ் தரப்பு அறிவித்தது.இருப்பினும், பலத்த பாதுகாப்பு மற்றும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் இருந்த மதுஷ் மீது மட்டும் எவ்வாறு துல்லியமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது இன்றும் விடைதெரியாத கேள்வியாகவே உள்ளது.டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மதுஷ், 18 மாதங்கள் சி.ஐ.டி. காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். அந்தச் சோதனைகளின் போது, சுமார் 80 இற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் சில அமைச்சர்களுடன் அவருக்கு இருந்த நெருக்கமான தொடர்புகள் குறித்த தகவல்கள் கசிந்தன.இதனைத் தொடர்ந்து, விசாரணைகளை முன்னெடுத்த ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதும், மதுஷ் திடீரென கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதும் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தின.மதுஷுடன் தொடர்புடைய அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் பாதுகாப்பதற்காகவே இந்த "திட்டமிட்ட கொலை" அரங்கேற்றப்பட்டது என்று சிவில் அமைப்புகள் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வந்தன.ஐந்து ஆண்டுகள் கடந்தும் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மதுஷின் குடும்பத்தினர் மற்றும் சிவில் அமைப்புகளின் கோரிக்கைக்கு இணங்க தற்போது விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.இந்தப் புதிய விசாரணையின் மூலம், மதுஷின் போதைப்பொருள் வலையமைப்பில் இருந்த அரசியல் புள்ளிகள் யார் மற்றும் அவரது கோடிக்கணக்கான பெறுமதியான சொத்துக்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன போன்ற உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement