• Mar 16 2026

கல்லந்தன்னாவில் மீட்கப்பட்டது இரத்தினப் பாறையா? கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்ட மூன்று துண்டுகள்

Chithra / Jan 21st 2026, 12:18 pm
image


கம்பளை - கலஹா - தெல்தொட்டவத்தவின் கீழ் கல்லந்தன்னா பகுதியில் உள்ள ஸ்ரீ முத்து மாரி அம்மன் கோவிலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை, இரத்தினக் கல்லா என  பரிசோதித்துப் பார்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  


அதன்படி நேற்று மாலை கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகள், இந்த பாறை, ரத்தினக் கல்லா என்பதைச் சோதித்துப் பார்க்க, மூன்று சிறிய துண்டுகளை உடைத்து கொழும்புக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.


அதிகாரிகள் அந்தக் கல்லை கொழும்புக்கு எடுத்துச் சென்று  பரிசோதித்து, அது ரத்தினக் கல்லா என்பதைத் தீர்மானித்துஇ பின்னர் பொதுமக்களுக்கு செய்தியை வெளியிடுவதாக கூறியிருந்தனர்.


இதேவேளை குறித்த பாறையை பார்வையிட அப் பகுதிக்கு மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 


இந்நிலையில் குறித்த பகுதியில் தற்போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


இதேவேளை இரவு வேளையில் குறித்த பாறைகள் பிரகாசமாக ஒளிர்வதையும் காணக் கூடியதாக உள்ளது. 


டிட்வா பேரழிவால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, குடியிருப்பாளர் ஒருவர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததை அடுத்து, கோயிலுக்கு அருகில் பல்வேறு வண்ணங்களில் பாறை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

கல்லந்தன்னாவில் மீட்கப்பட்டது இரத்தினப் பாறையா கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்ட மூன்று துண்டுகள் கம்பளை - கலஹா - தெல்தொட்டவத்தவின் கீழ் கல்லந்தன்னா பகுதியில் உள்ள ஸ்ரீ முத்து மாரி அம்மன் கோவிலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை, இரத்தினக் கல்லா என  பரிசோதித்துப் பார்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  அதன்படி நேற்று மாலை கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகள், இந்த பாறை, ரத்தினக் கல்லா என்பதைச் சோதித்துப் பார்க்க, மூன்று சிறிய துண்டுகளை உடைத்து கொழும்புக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.அதிகாரிகள் அந்தக் கல்லை கொழும்புக்கு எடுத்துச் சென்று  பரிசோதித்து, அது ரத்தினக் கல்லா என்பதைத் தீர்மானித்துஇ பின்னர் பொதுமக்களுக்கு செய்தியை வெளியிடுவதாக கூறியிருந்தனர்.இதேவேளை குறித்த பாறையை பார்வையிட அப் பகுதிக்கு மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் தற்போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இரவு வேளையில் குறித்த பாறைகள் பிரகாசமாக ஒளிர்வதையும் காணக் கூடியதாக உள்ளது. டிட்வா பேரழிவால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, குடியிருப்பாளர் ஒருவர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததை அடுத்து, கோயிலுக்கு அருகில் பல்வேறு வண்ணங்களில் பாறை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement