• Mar 10 2026

முள்ளிப்பொத்தானை பகுதியில் வீதியோரம் கொட்டப்படும் கழிவுகள்!

shanu / Mar 10th 2026, 10:12 am
image

தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை பிரதேச சபைக்குட்பட்ட நான்காம் வாய்க்காலுக்கும் மூன்றாம் வாய்க்காலுக்கும் இடைப்பட்ட பகுதியில், இனந்தெரியாத நபர்களால் தொடர்ச்சியாகக் கொட்டப்படும் கழிவுகளினால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களைப் பயன்படுத்தி, வீட்டுக்கழிவுகள் மற்றும் கடைக்கழிவுகள் தினசரி இவ்விடத்தில் கொட்டப்படுவதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.


வீதி ஓரத்திலும், விவசாயக் காணிகளுக்கு அருகிலும் இவ்வாறு கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் மற்றும் கிருமிகளின் தாக்கமும் அதிகரித்துள்ளது.


விவசாய நிலங்களுக்கு அருகில் கழிவுகள் சேர்வதால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயச் சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


"தினமும் யாரோ வந்து கழிவுகளைக் கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். இதனால் வீதியால் நடப்பவர்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை உடனே கவனிக்க வேண்டும்," என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.


தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்தச் சட்டவிரோதக் கழிவு அகற்றலைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க தம்பலகாமம் பிரதேச சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முள்ளிப்பொத்தானை பகுதியில் வீதியோரம் கொட்டப்படும் கழிவுகள் தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை பிரதேச சபைக்குட்பட்ட நான்காம் வாய்க்காலுக்கும் மூன்றாம் வாய்க்காலுக்கும் இடைப்பட்ட பகுதியில், இனந்தெரியாத நபர்களால் தொடர்ச்சியாகக் கொட்டப்படும் கழிவுகளினால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களைப் பயன்படுத்தி, வீட்டுக்கழிவுகள் மற்றும் கடைக்கழிவுகள் தினசரி இவ்விடத்தில் கொட்டப்படுவதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.வீதி ஓரத்திலும், விவசாயக் காணிகளுக்கு அருகிலும் இவ்வாறு கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் மற்றும் கிருமிகளின் தாக்கமும் அதிகரித்துள்ளது.விவசாய நிலங்களுக்கு அருகில் கழிவுகள் சேர்வதால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயச் சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது."தினமும் யாரோ வந்து கழிவுகளைக் கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். இதனால் வீதியால் நடப்பவர்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை உடனே கவனிக்க வேண்டும்," என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்தச் சட்டவிரோதக் கழிவு அகற்றலைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க தம்பலகாமம் பிரதேச சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement