• Nov 25 2024

மாந்தையில் கழிவு நீர் கால்வாய் புனரமைப்பு நடவடிக்கை ஆரம்பம்...!

Sharmi / May 17th 2024, 4:12 pm
image

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் நீண்ட காலமாக காணப்படும் கழிவு நீர் கால்வாய் புனரமைப்பு செய்யும் நடவடிக்கை இன்றைய தினம்(17) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்தராஜா தலைமையில் வைபவ ரீதியாக குறித்த வேளைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் ஜீ.ஐ.சட் (GIZ)  நிறுவனம் இணைந்து கோப் வேலைத்திட்டத்தின் கீழ் 4.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கால்வாய் புனரமைப்பு வேளை திட்ட ஆரம்பித்து வைக்கப்பட்டது.

'கால்வாய்களை புனரமைப்பதன் மூலம் சமூகத்தை ஒன்றிணைக்கும் திட்டம்' எனும் தொனிப்பொருளில்  சாளம்பன் கிராமத்தில்  விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் மாவட்ட உத்தியோகத்தர் ஜெகநாதன் டலிமா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

சாளம்பன் கிராமத்தில் பல்லின சமூகமும் வாழ்ந்து வருகின்ற நிலையில் குறித்த கிராமத்தினுடாக செல்லும் கால்வாயில் பாரிய சம்பம் புற்கள் காணப்படுகின்றது.குறித்த கால்வாய் அப்பகுதியில் பல கிராமங்களுடாக சென்று நாயாற்று வழியாக கடலில் கலக்கின்றது.

இந்த நிலையில் குறித்த கால்வாய் உரிய முறையில் பராமரிப்பு இல்லாத நிலையில் பாரிய புற்கள் வளர்ந்துள்ள நிலையில் கழிவுநீர் செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

இனால் ஏற்படும் மழை காரணமாக குறித்த கிராமத்தில் வெள்ளம் ஏற்படும் நிலை காணப்பட்டது.இந்த நிலையில் விழுதுகள் ஆற்றல்   மேம்பாட்டு மையம் மற்றும் ஜீ.ஐ.சட் (GIZ) நிறுவனம் இணைந்து கோப் வேலைத்திட்டத்தின் கீழ் 4.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கால்வாய் புனரமைப்பு வேளை திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்தராஜா, ஜீ.ஐ.சட் (GIZ) நிறுவனத்தின் ஆலோசகர் சொர்ணம் பெர்ணான்டோ,மத தலைவர்கள்,நீர்பாசன பொறியியலாளர் உள்ளடங்களாக கிராம மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


மாந்தையில் கழிவு நீர் கால்வாய் புனரமைப்பு நடவடிக்கை ஆரம்பம். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் நீண்ட காலமாக காணப்படும் கழிவு நீர் கால்வாய் புனரமைப்பு செய்யும் நடவடிக்கை இன்றைய தினம்(17) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்தராஜா தலைமையில் வைபவ ரீதியாக குறித்த வேளைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் ஜீ.ஐ.சட் (GIZ)  நிறுவனம் இணைந்து கோப் வேலைத்திட்டத்தின் கீழ் 4.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கால்வாய் புனரமைப்பு வேளை திட்ட ஆரம்பித்து வைக்கப்பட்டது.'கால்வாய்களை புனரமைப்பதன் மூலம் சமூகத்தை ஒன்றிணைக்கும் திட்டம்' எனும் தொனிப்பொருளில்  சாளம்பன் கிராமத்தில்  விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் மாவட்ட உத்தியோகத்தர் ஜெகநாதன் டலிமா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.சாளம்பன் கிராமத்தில் பல்லின சமூகமும் வாழ்ந்து வருகின்ற நிலையில் குறித்த கிராமத்தினுடாக செல்லும் கால்வாயில் பாரிய சம்பம் புற்கள் காணப்படுகின்றது.குறித்த கால்வாய் அப்பகுதியில் பல கிராமங்களுடாக சென்று நாயாற்று வழியாக கடலில் கலக்கின்றது.இந்த நிலையில் குறித்த கால்வாய் உரிய முறையில் பராமரிப்பு இல்லாத நிலையில் பாரிய புற்கள் வளர்ந்துள்ள நிலையில் கழிவுநீர் செல்ல முடியாத நிலை காணப்பட்டது.இனால் ஏற்படும் மழை காரணமாக குறித்த கிராமத்தில் வெள்ளம் ஏற்படும் நிலை காணப்பட்டது.இந்த நிலையில் விழுதுகள் ஆற்றல்   மேம்பாட்டு மையம் மற்றும் ஜீ.ஐ.சட் (GIZ) நிறுவனம் இணைந்து கோப் வேலைத்திட்டத்தின் கீழ் 4.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கால்வாய் புனரமைப்பு வேளை திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்தராஜா, ஜீ.ஐ.சட் (GIZ) நிறுவனத்தின் ஆலோசகர் சொர்ணம் பெர்ணான்டோ,மத தலைவர்கள்,நீர்பாசன பொறியியலாளர் உள்ளடங்களாக கிராம மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement