களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்வடைந்து வருவதால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வதால் கொலன்னாவை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக கொலன்னாவ பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மூவாயிரத்து 727 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 864 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மூவாயிரத்து 304 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 17 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வு களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்வடைந்து வருவதால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.இந்நிலையில், களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வதால் கொலன்னாவை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக கொலன்னாவ பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மூவாயிரத்து 727 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 864 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மூவாயிரத்து 304 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 17 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.