• Sep 08 2024

மத்திய மலைநாட்டில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு..! மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

Chithra / May 21st 2024, 11:16 am
image

Advertisement


மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் தற்போது 5 அடி உயர்ந்துள்ளதுடன், காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது.

அத்துடன் ஏனைய நீர் தேக்கங்களான கென்யோன், லக்சபான நவலக்சபான பொல்பிட்டிய கலுகல விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து சீரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள்,  பண்ணையாளர்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஆரம்பித்து இரண்டாம் நாளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைந்த நிலையில் உள்ளது.

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான காற்று வீசுவதால் வாழை மற்றும் ஏனைய மரங்கள் முறிந்து உள்ளன.

நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் ஆங்காங்கே மண் திட்டுகள் சரிந்து விழுந்ததுள்ளது.

இப் பகுதியில் கடுமையான மழையுடன் பனி மூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி பணித்துள்ளார்.


மத்திய மலைநாட்டில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக நீர் தேக்க பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் தற்போது 5 அடி உயர்ந்துள்ளதுடன், காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது.அத்துடன் ஏனைய நீர் தேக்கங்களான கென்யோன், லக்சபான நவலக்சபான பொல்பிட்டிய கலுகல விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.தொடர்ந்து சீரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள்,  பண்ணையாளர்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.பாடசாலை ஆரம்பித்து இரண்டாம் நாளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைந்த நிலையில் உள்ளது.மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான காற்று வீசுவதால் வாழை மற்றும் ஏனைய மரங்கள் முறிந்து உள்ளன.நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் ஆங்காங்கே மண் திட்டுகள் சரிந்து விழுந்ததுள்ளது.இப் பகுதியில் கடுமையான மழையுடன் பனி மூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி பணித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement