• Jan 26 2025

அதிகரித்து வரும் குளங்களின் நீர்மட்டம் - வெள்ளத்தில் மூழ்கிய நாட்டின் பல பகுதிகள்

Chithra / Jan 22nd 2025, 11:31 am
image



பெய்து வரும் கனமழை காரணமாகவும், மாவிலாற்றிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளமையாலும் வெருகல் - மாவடிச்சேனை பகுதியில் இன்று வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெருகல் - மாவடிச்சேனைப் பகுதியிலுள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

எனினும்  இடப்பெயர்வுகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மாவடிச்சேனை பகுதியில் வீதியை குருக்கருத்து சுமார் 2 அடியில் நீர் பிரவாகம் காணப்படுகிறது.

இதனால் மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதி ஊடாக பிரயாணம் செய்யும் வாகனங்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிப்பதையும் காணமுடிந்தது.

அத்தோடு வெருகல் சிறி சித்திர வேலாயுதர் சுவாமி தேவஷ்தான வளாகம் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதையும்  அவதானிக்க கூடியதாக இருந்தது. 


இதேவேளை அநுராதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, அம்மாவட்டத்தின் பல பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

குறிப்பாக ஜெய ஸ்ரீமஹா போதி மாவத்தையில் அமைந்துள்ள சுற்றுலா பொலிஸ் நிலையம், தொல்பொருள் அலுவலகம், ஹோட்டல், பாடசாலை ஆகியன நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கலா வாவி, நாச்சதுவ, கண்டி வாவி உள்ளிட்ட பெரிய குளங்களிலிருந்தும், பல சிறிய குளங்களிலிருந்தும் வெளியேறும் நீர் மல்வத்து ஓயாவில் தேங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக  கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேலும் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், பத்து வான் கதவுகளில் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி நீரை வெளியேற்றுவதற்கு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  நாளொன்றுக்கு 1600 கனஅடி நீர் வெளியேறி வருவதாகவும்  கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் குளங்களின் நீர்மட்டம் - வெள்ளத்தில் மூழ்கிய நாட்டின் பல பகுதிகள் பெய்து வரும் கனமழை காரணமாகவும், மாவிலாற்றிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளமையாலும் வெருகல் - மாவடிச்சேனை பகுதியில் இன்று வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வெருகல் - மாவடிச்சேனைப் பகுதியிலுள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.எனினும்  இடப்பெயர்வுகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மாவடிச்சேனை பகுதியில் வீதியை குருக்கருத்து சுமார் 2 அடியில் நீர் பிரவாகம் காணப்படுகிறது.இதனால் மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதி ஊடாக பிரயாணம் செய்யும் வாகனங்கள் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிப்பதையும் காணமுடிந்தது.அத்தோடு வெருகல் சிறி சித்திர வேலாயுதர் சுவாமி தேவஷ்தான வளாகம் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதையும்  அவதானிக்க கூடியதாக இருந்தது. இதேவேளை அநுராதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, அம்மாவட்டத்தின் பல பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக ஜெய ஸ்ரீமஹா போதி மாவத்தையில் அமைந்துள்ள சுற்றுலா பொலிஸ் நிலையம், தொல்பொருள் அலுவலகம், ஹோட்டல், பாடசாலை ஆகியன நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கலா வாவி, நாச்சதுவ, கண்டி வாவி உள்ளிட்ட பெரிய குளங்களிலிருந்தும், பல சிறிய குளங்களிலிருந்தும் வெளியேறும் நீர் மல்வத்து ஓயாவில் தேங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக  கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மேலும் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், பத்து வான் கதவுகளில் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி நீரை வெளியேற்றுவதற்கு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்  நாளொன்றுக்கு 1600 கனஅடி நீர் வெளியேறி வருவதாகவும்  கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement