• Jan 26 2025

கொழும்பில் 12 மணி நேர நீர் விநியோகம் தடை

Chithra / Jan 15th 2025, 9:02 am
image

 

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (16) மாலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 6.00 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இவ்வாறு தடை செய்யப்படவுள்ளது.

கொழும்பில் 12 மணி நேர நீர் விநியோகம் தடை  கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (16) மாலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 6.00 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இவ்வாறு தடை செய்யப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement