• Jan 15 2025

நாட்டில் கிளர்ச்சியைத் தூண்ட முயற்சி; தென் கொரிய ஜனாதிபதி கைது..!

Sharmi / Jan 15th 2025, 8:56 am
image

நாட்டில் கிளர்ச்சியைத் தூண்ட முயன்ற குற்றச்சாட்டில் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் இன்று(15) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சியோலில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் அவரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் ஜனவரி 3 ஆம் திகதி  அவரை கைது செய்ய முற்பட்டபோதும், அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தால் கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையில் அவர் தற்போது அவர்  இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இன்றையதினம்  அதிகாலையில் யூன் சுக் இயோலின் வீட்டின் முன் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் குவிக்கப்பட்ட அதேவேளை, யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் 6500 பேர் ஒன்றுகூடி பதாகைகளுடன் இதன்போது போராட்டம் நடத்தினர்.

எனினும் தடைகளை மீறி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நாட்டில் கிளர்ச்சியைத் தூண்ட முயற்சி; தென் கொரிய ஜனாதிபதி கைது. நாட்டில் கிளர்ச்சியைத் தூண்ட முயன்ற குற்றச்சாட்டில் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் இன்று(15) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.சியோலில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் அவரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் ஜனவரி 3 ஆம் திகதி  அவரை கைது செய்ய முற்பட்டபோதும், அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தால் கைது செய்ய முடியவில்லை.இந்நிலையில் அவர் தற்போது அவர்  இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இன்றையதினம்  அதிகாலையில் யூன் சுக் இயோலின் வீட்டின் முன் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் குவிக்கப்பட்ட அதேவேளை, யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் 6500 பேர் ஒன்றுகூடி பதாகைகளுடன் இதன்போது போராட்டம் நடத்தினர்.எனினும் தடைகளை மீறி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement