• Oct 17 2024

தெளிவான இலக்கினை நோக்கி பயணிக்கின்றோம் - கஜேந்திரகுமார்

Tharmini / Oct 17th 2024, 12:34 pm
image

Advertisement

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர் சுப்பிரமணியம் தவபாலன் வேட்பாளர்களான திலகநாதன்  கிந்துஜன் , தேவதாஸ் தினேஷ்குமார் மற்றும் திருமதி.றகுமதி.சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் நேற்று( 16) மாலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்புஒன்றை நடத்தினர் 

இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி தமிழர் தாயத்தில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றது வெற்றி பெறவேண்டும் என்று செயற்படும் அமைப்பு அல்ல தெளிவான இலக்கினை நோக்கி பயணிக்கின்றோம் இந்த தீவில் உள்ள இரண்டு தேசங்கள் அங்கிகரிக்கப்படவேண்டும் என்ற நோக்கம் சிங்கள தேசம் அங்கிகரிக்கப்பட்டு தமிழர்தேசம் அங்கீகரிக்கப்படாத நிலையால் மிகமோசமாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

சிங்களதேசம் தங்களின் பெரும்பான்மையினை வைத்துக்கொண்டு தமிழர் தேசத்தில் இருக்கின்ற நிலப்பரப்பினை ஆக்கிரமித்து அதனை திட்டமிட்ட சிங்கள மயமாக்கலினைத்தான் கடந்த 1948 ஆம் ஆண்டு தொடக்கம் செய்து வருகின்றது. எங்கள் தேச அந்தஸ்து என்பது தவிர்க்கமுடியாத தேவைப்படுகின்ற ஒரு நிலைப்பாடு இந்த நிலைப்பாட்டினை உறுதிப்படுத்துவதுதான் எங்கள் இலக்காக இருந்தாலும், இன்று மிகப்பெரிய ஆபத்து நடக்க இருக்கின்றது தேசிய மக்கள் சக்தியின் அங்கம் வகிக்கக்கூடிய ரில்வின் சில்வா நேற்று ஒரு கூட்டத்தில் சொல்லியுள்ளர் வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு அதிகார பகிர்வு எதுவும் அவசியம் இல்லை, அது தமிழ் மக்களின் கோரிக்கையாகவும் இல்லை என்றும் சொல்லியுள்ளார்.

அதற்கான அடிப்படை ஒன்று இருக்கின்றது கடந்த ஐனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு புதியஅரசியல் அமைப்பு ஊடாக இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்ற கருத்தினை வெளிப்படுத்தி இருந்தாலும் புதிய அரசியல் அமைப்பு 2015 ஆண்டு மைதிரிபாலசிறீசேன, ரணில் விக்கிரமசிங்க காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் அமைப்புக்கான புதிய அறிக்கை இடையில் ஸ்தம்பிக்கப்பட்டது. அதனை நிறைவேற்றுவதன் ஊடாகத்தான் இந்த புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்படும் என்றும் அதன் ஊடாக தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.

அந்த வரைபினை தயாரிப்பதற்கு அன்று பாராளுமன்றத்தில் இருந்த அனைத்து தரப்புக்களும் ஒத்துளைத்திருந்தார்கள் அன்று பாராளுமன்றத்தில் ஈபிடிபியும்,தமிழ்தேசியக்கூட்டமைப்பும்தான் மக்கள் பிரதிநிதிகள் இருந்தர்கள் அந்த வரைபினை தாயரிக்கும் குழுவின்தலைவராக கூட்டமைப்பு சித்தார்த்தனைதான் தலைவராக நியமித்திருந்தார்கள்.

இன்று அனுரகுமாரதிஸ்சநாயக்காவின் செயற்பாட்டினை எடுத்து பார்த்தால் தென்னிலங்கையில் ஊழலினை அழிக்கிறதற்கு நடவடிக்கை எடுத்தாலும் வடகிழக்கில் ஊழல் வாதிகளை அழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்போறது இல்லை ஊழல் வாதிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினை தவிர்ந்து மற்றைய முழுப்பேரும் உள்ளேபோவார்கள்.

தேர்தலின் பின்னர் அவருக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்குமோ என்பது கேள்விக்குறி அந்த பெரும்பான்மையினை எடுப்பதற்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தரப்புக்களைத்தான் தேடவேண்டும் அதில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் பேரம்பேசுவது கடினமான விடயம் அவ்வாறு இருந்தால் தமிழர்களின் உரிமைசார்ந்த விடையங்களில் விட்டுக்கொடுப்புக்களை அவர்கள் செய்யவேண்டி வரும்
அதனை தவிர்த்து ஏதோ ஒருவகையில் பெரும்பான்மை எடுப்பதாக இருந்தால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினை தவிர்ந்த மற்றவர்கள் வெல்லவேண்டும் அவர்கள் இருந்தால் மட்டும்தான் அவர்களுக்கு பெரும்பான்மை எடுக்கும் வாய்ப்பு உள்ளன.

கொள்கையளவில் அவர் சொல்லியுள்ளார் தமிழ்தரப்புக்கள் தேர்தலின் பின்னர் தன்னை ஆதரிக்க இருப்பதாக சொல்லியுள்ளார். நிபந்தனை இல்லாத ஆதரவினை கொடுக்கக்கூடிய ஒரோ ஒரு தரப்பு இந்த ஊழல் வாதிகள்தான் தங்களின் ஊழல் பிடிபடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஆதரிக்க தயாராக இருக்கின்றார்கள். அவர்கள் செய்யப்போது அவர்கள் ஒத்துளைப்பு கொடுத்து தயாரிக்கப்பட்ட ஏக்கிய இராச்சிய அரசியல் அமைப்பு இவற்றை பார்த்தால் தமிழர்களின் சரித்திரத்தில் முதல்தடவையாக தமிழர்களின் ஆதரவுடன் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு ஒன்று நிறைவேற்றப்பட்டதாக சரித்திரம் ஒன்று புதிதாக தொடங்கப்போகின்றது.

இதனை தடுப்பதாக இருந்தால் வடகிழக்கில் இருந்து தேர்ந்தெடுக்கக்கூடிய 18 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி குறைந்தது 10 ஆசனங்களை பெற்று ஆகவேண்டும் அதுதான் எங்களின் இலக்கு.

தெளிவான இலக்கினை நோக்கி பயணிக்கின்றோம் - கஜேந்திரகுமார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர் சுப்பிரமணியம் தவபாலன் வேட்பாளர்களான திலகநாதன்  கிந்துஜன் , தேவதாஸ் தினேஷ்குமார் மற்றும் திருமதி.றகுமதி.சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் நேற்று( 16) மாலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்புஒன்றை நடத்தினர் இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.தமிழ்தேசிய மக்கள் முன்னணி தமிழர் தாயத்தில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றது வெற்றி பெறவேண்டும் என்று செயற்படும் அமைப்பு அல்ல தெளிவான இலக்கினை நோக்கி பயணிக்கின்றோம் இந்த தீவில் உள்ள இரண்டு தேசங்கள் அங்கிகரிக்கப்படவேண்டும் என்ற நோக்கம் சிங்கள தேசம் அங்கிகரிக்கப்பட்டு தமிழர்தேசம் அங்கீகரிக்கப்படாத நிலையால் மிகமோசமாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.சிங்களதேசம் தங்களின் பெரும்பான்மையினை வைத்துக்கொண்டு தமிழர் தேசத்தில் இருக்கின்ற நிலப்பரப்பினை ஆக்கிரமித்து அதனை திட்டமிட்ட சிங்கள மயமாக்கலினைத்தான் கடந்த 1948 ஆம் ஆண்டு தொடக்கம் செய்து வருகின்றது. எங்கள் தேச அந்தஸ்து என்பது தவிர்க்கமுடியாத தேவைப்படுகின்ற ஒரு நிலைப்பாடு இந்த நிலைப்பாட்டினை உறுதிப்படுத்துவதுதான் எங்கள் இலக்காக இருந்தாலும், இன்று மிகப்பெரிய ஆபத்து நடக்க இருக்கின்றது தேசிய மக்கள் சக்தியின் அங்கம் வகிக்கக்கூடிய ரில்வின் சில்வா நேற்று ஒரு கூட்டத்தில் சொல்லியுள்ளர் வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு அதிகார பகிர்வு எதுவும் அவசியம் இல்லை, அது தமிழ் மக்களின் கோரிக்கையாகவும் இல்லை என்றும் சொல்லியுள்ளார்.அதற்கான அடிப்படை ஒன்று இருக்கின்றது கடந்த ஐனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு புதியஅரசியல் அமைப்பு ஊடாக இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்ற கருத்தினை வெளிப்படுத்தி இருந்தாலும் புதிய அரசியல் அமைப்பு 2015 ஆண்டு மைதிரிபாலசிறீசேன, ரணில் விக்கிரமசிங்க காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் அமைப்புக்கான புதிய அறிக்கை இடையில் ஸ்தம்பிக்கப்பட்டது. அதனை நிறைவேற்றுவதன் ஊடாகத்தான் இந்த புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்படும் என்றும் அதன் ஊடாக தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.அந்த வரைபினை தயாரிப்பதற்கு அன்று பாராளுமன்றத்தில் இருந்த அனைத்து தரப்புக்களும் ஒத்துளைத்திருந்தார்கள் அன்று பாராளுமன்றத்தில் ஈபிடிபியும்,தமிழ்தேசியக்கூட்டமைப்பும்தான் மக்கள் பிரதிநிதிகள் இருந்தர்கள் அந்த வரைபினை தாயரிக்கும் குழுவின்தலைவராக கூட்டமைப்பு சித்தார்த்தனைதான் தலைவராக நியமித்திருந்தார்கள். இன்று அனுரகுமாரதிஸ்சநாயக்காவின் செயற்பாட்டினை எடுத்து பார்த்தால் தென்னிலங்கையில் ஊழலினை அழிக்கிறதற்கு நடவடிக்கை எடுத்தாலும் வடகிழக்கில் ஊழல் வாதிகளை அழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்போறது இல்லை ஊழல் வாதிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினை தவிர்ந்து மற்றைய முழுப்பேரும் உள்ளேபோவார்கள்.தேர்தலின் பின்னர் அவருக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்குமோ என்பது கேள்விக்குறி அந்த பெரும்பான்மையினை எடுப்பதற்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தரப்புக்களைத்தான் தேடவேண்டும் அதில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் பேரம்பேசுவது கடினமான விடயம் அவ்வாறு இருந்தால் தமிழர்களின் உரிமைசார்ந்த விடையங்களில் விட்டுக்கொடுப்புக்களை அவர்கள் செய்யவேண்டி வரும்அதனை தவிர்த்து ஏதோ ஒருவகையில் பெரும்பான்மை எடுப்பதாக இருந்தால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினை தவிர்ந்த மற்றவர்கள் வெல்லவேண்டும் அவர்கள் இருந்தால் மட்டும்தான் அவர்களுக்கு பெரும்பான்மை எடுக்கும் வாய்ப்பு உள்ளன.கொள்கையளவில் அவர் சொல்லியுள்ளார் தமிழ்தரப்புக்கள் தேர்தலின் பின்னர் தன்னை ஆதரிக்க இருப்பதாக சொல்லியுள்ளார். நிபந்தனை இல்லாத ஆதரவினை கொடுக்கக்கூடிய ஒரோ ஒரு தரப்பு இந்த ஊழல் வாதிகள்தான் தங்களின் ஊழல் பிடிபடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஆதரிக்க தயாராக இருக்கின்றார்கள். அவர்கள் செய்யப்போது அவர்கள் ஒத்துளைப்பு கொடுத்து தயாரிக்கப்பட்ட ஏக்கிய இராச்சிய அரசியல் அமைப்பு இவற்றை பார்த்தால் தமிழர்களின் சரித்திரத்தில் முதல்தடவையாக தமிழர்களின் ஆதரவுடன் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு ஒன்று நிறைவேற்றப்பட்டதாக சரித்திரம் ஒன்று புதிதாக தொடங்கப்போகின்றது.இதனை தடுப்பதாக இருந்தால் வடகிழக்கில் இருந்து தேர்ந்தெடுக்கக்கூடிய 18 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி குறைந்தது 10 ஆசனங்களை பெற்று ஆகவேண்டும் அதுதான் எங்களின் இலக்கு.

Advertisement

Advertisement

Advertisement