• Dec 09 2024

முட்டை விலையில் மக்களுக்கு மானியம்? அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

Egg
Chithra / Oct 17th 2024, 12:40 pm
image

 

முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முதலீடு செய்து முட்டை விலையில் மக்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனநாத் பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.

முட்டைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதால் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

இந்த விலையை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் காரணமாக மாலைதீவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சி சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உற்பத்திச் செலவு அதிகமாகியுள்ள நிலையில், கோழிகளுக்கு தீவனம் கொடுப்பதில் சிரமம் இருப்பதால், உற்பத்தியாளர்கள் கோழிகளை இறைச்சியாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முட்டை விலையில் மக்களுக்கு மானியம் அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை  முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முதலீடு செய்து முட்டை விலையில் மக்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வழக்கறிஞர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனநாத் பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.முட்டைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதால் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.இந்த விலையை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் காரணமாக மாலைதீவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சி சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.உற்பத்திச் செலவு அதிகமாகியுள்ள நிலையில், கோழிகளுக்கு தீவனம் கொடுப்பதில் சிரமம் இருப்பதால், உற்பத்தியாளர்கள் கோழிகளை இறைச்சியாக விற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement