• Sep 22 2024

தேர்தலைக் கண்டு அஞ்சி ஓடும் கூட்டம் நாமல்ல :வெற்றி எமக்கே - மஹிந்த திட்டவட்டம்!

Sharmi / Jan 28th 2023, 2:17 pm
image

Advertisement

'தேர்தலைக் கண்டு அஞ்சி ஓடும் கூட்டத்தினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அல்லர். நாட்டில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருக்கின்றது.'என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அநுராதபுரம் விகாரைக்கு நேற்று விஜயம் செய்த போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

வரலாற்று சிறப்புமிக்க ஜயர சிறி மகா போதியை முன்னிட்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ச அதமஸ்தானாதிபதி பூஜ்ய பல்லேகம ஹேமரதன தேரர் பார்வையிட்டார்.

பின்னர், ருவான்வெளி மகா சாயியை வழிபட்ட மஹிந்த,ருவன்வெளி சைத்தியராமதிகாரி வணக்கத்துக்குரிய ஈதல்வெதுனுவே ஞானதிலக தேரரையும் தரிசித்தார்.

அதன் பின்னர், தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்இ தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமது கட்சி பலமாக இருக்கின்றது என்றும், தேர்தலைக் கண்டு அஞ்சி ஓடும் கூட்டத்தினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அல்லர் என்றும் கூறினார்.

தமக்கு வெற்றி வாய்ப்பு உறுதி என்ற பின்னர் தேர்தலுக்குத் தாம் ஏன் பயப்பட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தேர்தலைக் கண்டு அஞ்சி ஓடும் கூட்டம் நாமல்ல :வெற்றி எமக்கே - மஹிந்த திட்டவட்டம் 'தேர்தலைக் கண்டு அஞ்சி ஓடும் கூட்டத்தினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அல்லர். நாட்டில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருக்கின்றது.'என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.அநுராதபுரம் விகாரைக்கு நேற்று விஜயம் செய்த போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறினார்.வரலாற்று சிறப்புமிக்க ஜயர சிறி மகா போதியை முன்னிட்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ச அதமஸ்தானாதிபதி பூஜ்ய பல்லேகம ஹேமரதன தேரர் பார்வையிட்டார்.பின்னர், ருவான்வெளி மகா சாயியை வழிபட்ட மஹிந்த,ருவன்வெளி சைத்தியராமதிகாரி வணக்கத்துக்குரிய ஈதல்வெதுனுவே ஞானதிலக தேரரையும் தரிசித்தார்.அதன் பின்னர், தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்இ தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமது கட்சி பலமாக இருக்கின்றது என்றும், தேர்தலைக் கண்டு அஞ்சி ஓடும் கூட்டத்தினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அல்லர் என்றும் கூறினார்.தமக்கு வெற்றி வாய்ப்பு உறுதி என்ற பின்னர் தேர்தலுக்குத் தாம் ஏன் பயப்பட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement

Advertisement

Advertisement