• Nov 14 2024

தொழிற்சங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து நாட்டை ஆட்சி செய்ய முடியாது...! அலி சப்ரி சுட்டிக்காட்டு...!

Sharmi / Jun 8th 2024, 2:15 pm
image

தொழிற்சங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனவும் மக்கள் நலனுக்குத் தேவையான தீர்மானங்களை உரிய வகையில் எடுப்பது அவசியமென வெளிவிவகார அமைச்சர்  அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயல்படுவதானால் அமைச்சரவையோ, பாராளுமன்றமோ அவசியமில்லை என்றும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மின்சார சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

லெகோ நிறுவனம் ஜே .ஆர் ஜயவர்தனவினால் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அந்நிறுவனத்தை விற்கையில் தொழிற்சங்கங்கள்ஆறு ஏழு நாட்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டன. 

பல்வேறு விடயங்களை அரச நிர்வாகத்தின் கீழ் இல்லாமல் தம்மிடம் வைத்துக் கொண்டு தமக்கு தேவையான வகையில் செயற்படுத்துவதே இடம்பெறுகிறது.இதற்கு இடமளிக்க முடியாது.

என்றாவது நாம் மேற்கொள்ள வேண்டியதை நிறைவேற்றியே ஆக வேண்டும். 

அந்தவகையில் துணிச்சலுடன் தீர்மானங்களை மேற்கொள்ளும் அமைச்சர் கஞ்சன விஜேசேக்கரவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

இலங்கையில் மாத்திரமே மின்சாரத் துறை ஒரே ஏகபோக உரிமையின் கீழே காணப்படுகிறது. 

ஏனைய நாடுகளில் மின்சார உற்பத்தி, விநியோகம், ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தனித்தனியே காணப்படுகின்றன. ஏகபோக உரிமையுள்ள இடத்திலேயே முறைகேடுகளும் மோசடிகளும் இடம்பெறுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அலி சப்ரி சுட்டிக்காட்டு. தொழிற்சங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனவும் மக்கள் நலனுக்குத் தேவையான தீர்மானங்களை உரிய வகையில் எடுப்பது அவசியமென வெளிவிவகார அமைச்சர்  அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.தொழிற்சங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயல்படுவதானால் அமைச்சரவையோ, பாராளுமன்றமோ அவசியமில்லை என்றும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மின்சார சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். லெகோ நிறுவனம் ஜே .ஆர் ஜயவர்தனவினால் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அந்நிறுவனத்தை விற்கையில் தொழிற்சங்கங்கள்ஆறு ஏழு நாட்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டன. பல்வேறு விடயங்களை அரச நிர்வாகத்தின் கீழ் இல்லாமல் தம்மிடம் வைத்துக் கொண்டு தமக்கு தேவையான வகையில் செயற்படுத்துவதே இடம்பெறுகிறது.இதற்கு இடமளிக்க முடியாது.என்றாவது நாம் மேற்கொள்ள வேண்டியதை நிறைவேற்றியே ஆக வேண்டும். அந்தவகையில் துணிச்சலுடன் தீர்மானங்களை மேற்கொள்ளும் அமைச்சர் கஞ்சன விஜேசேக்கரவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.இலங்கையில் மாத்திரமே மின்சாரத் துறை ஒரே ஏகபோக உரிமையின் கீழே காணப்படுகிறது. ஏனைய நாடுகளில் மின்சார உற்பத்தி, விநியோகம், ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தனித்தனியே காணப்படுகின்றன. ஏகபோக உரிமையுள்ள இடத்திலேயே முறைகேடுகளும் மோசடிகளும் இடம்பெறுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement