வாக்களிக்கும் உரிமையும், பொதுத் தேர்தலின் முக்கியத்துவமும், தமிழ் பேசும் மக்களின் இருப்பும் எனும் தொணிப் பொருளின்கீழ்.
திருகோணமலை சிவில் செயற்பாட்டாளர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நேற்று (09) மாலை இடம்பெற்றது.
இதன்போது இளம் சிவில் சமூக சிவில் செயற்பாட்டாளரான கேஷிஹன் இளமுருகநாதன் கருத்துத் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தற்போது எதிர்நோக்கி இருக்கின்றோம். வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. ஒடுக்கு முறைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.
இந்த ஒடுக்கு முறைகளையும், அடக்குமுறைகளையும் தடுப்பதற்கு நமக்காக நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய சிறந்த அரசியல் தலைவர்களை நாம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேர்வுசெய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.
எமக்காக பாராளுமன்றத்தில் பேசக்கூடிய தலைவரைத் தெரிவு செய்யவேண்டும் - கேஷிஹன் வாக்களிக்கும் உரிமையும், பொதுத் தேர்தலின் முக்கியத்துவமும், தமிழ் பேசும் மக்களின் இருப்பும் எனும் தொணிப் பொருளின்கீழ். திருகோணமலை சிவில் செயற்பாட்டாளர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நேற்று (09) மாலை இடம்பெற்றது.இதன்போது இளம் சிவில் சமூக சிவில் செயற்பாட்டாளரான கேஷிஹன் இளமுருகநாதன் கருத்துத் தெரிவிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் நாம் தற்போது எதிர்நோக்கி இருக்கின்றோம். வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. ஒடுக்கு முறைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.இந்த ஒடுக்கு முறைகளையும், அடக்குமுறைகளையும் தடுப்பதற்கு நமக்காக நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய சிறந்த அரசியல் தலைவர்களை நாம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேர்வுசெய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.