• Nov 23 2024

மின்சார சட்டமூலம் தொடர்பில் விவாதிக்க இரு நாட்கள் வேண்டும்...! சபையில் விமல் விடாப்பிடி...!

Sharmi / Jun 4th 2024, 1:51 pm
image

மின்சார சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றில் இன்றையதினம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்,  குறித்த சட்டமூலம் குறித்து விவாதிக்க இரு நாட்களை ஒதுக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம்(04)  இடம்பெற்றுவரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலே பங்கேற்கின்ற எதிர்கட்சியினர் மின்சார சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் மூன்று நாள் விவாதத்தை கோரியிருக்க வேண்டும். அதையிட்டு நான் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றேன்.

இது மின்வலு தொடர்பான பிரச்சினை. எதிர்கட்சி என்றாலும் ஆளுந் தரப்பு என்றாலும் மின்சார சட்டமூலம் தொடர்பில் இரு நாட்களை விவாதத்திற்கு எடுத்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு நாளே விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் கதைப்பதற்கும் எமக்கு போதுமான நேரம் ஒதுக்கப்படவில்லை.

அதேவேளை, மின்சார சட்டமூலம் தொடர்பில் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இலகுவான விடயமாக கருதுவது நியாயமில்லை. 

எனவே, மின்சார சட்டமூலம் தொடர்பில் விவாதிப்பதற்கு இரு நாட்களை ஒதுக்குமாறும் சபாநாயகரிடம்  விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை இரண்டு நாட்களும் எமது பேச்சு சுதந்திரத்தை பறிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

மின்சார சட்டமூலம் தொடர்பில் விவாதிக்க இரு நாட்கள் வேண்டும். சபையில் விமல் விடாப்பிடி. மின்சார சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றில் இன்றையதினம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்,  குறித்த சட்டமூலம் குறித்து விவாதிக்க இரு நாட்களை ஒதுக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்றையதினம்(04)  இடம்பெற்றுவரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலே பங்கேற்கின்ற எதிர்கட்சியினர் மின்சார சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் மூன்று நாள் விவாதத்தை கோரியிருக்க வேண்டும். அதையிட்டு நான் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றேன்.இது மின்வலு தொடர்பான பிரச்சினை. எதிர்கட்சி என்றாலும் ஆளுந் தரப்பு என்றாலும் மின்சார சட்டமூலம் தொடர்பில் இரு நாட்களை விவாதத்திற்கு எடுத்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு நாளே விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த பிரச்சினை தொடர்பில் கதைப்பதற்கும் எமக்கு போதுமான நேரம் ஒதுக்கப்படவில்லை.அதேவேளை, மின்சார சட்டமூலம் தொடர்பில் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இலகுவான விடயமாக கருதுவது நியாயமில்லை. எனவே, மின்சார சட்டமூலம் தொடர்பில் விவாதிப்பதற்கு இரு நாட்களை ஒதுக்குமாறும் சபாநாயகரிடம்  விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.அதேவேளை இரண்டு நாட்களும் எமது பேச்சு சுதந்திரத்தை பறிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement