• Jun 08 2025

எல்லா சமூகங்களுடனும் ஒற்றுமையுடனும் சந்தோஷமாகவும் அச்சமுமின்றி வாழ வேண்டும் - யாழ் மாநகர சபை உறுப்பினரின் பெருநாள் வாழ்த்துச்செய்தி!

Thansita / Jun 7th 2025, 9:59 am
image

எல்லா சமூகங்களுடனும் ஒற்றுமையுடனும் சந்தோஷமாகவும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாகவும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

ஹஜ் பெருநாள், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளாகும். இஸ்லாமிய சமூகம், தமது கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாகவும் இதனை நான் பார்க்கிறேன்.

அனைத்து சமயத் தலைவர்களும் மனித சமூகத்தின் நல்வாழ்வுக்குத் தேவையான உலகப் பொதுவான நன்நெறிகளை எமக்குத் தந்துள்ளனர். சமூக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும், அவற்றின் பங்களிப்பு மகத்தானதாகும். இது, உலகின் தொடர்ச்சியான நல் இருப்புக்கு இன்றியமையாத காரணியாகும்.

இஸ்லாத்தின் இறுதித் தூதராகக் கருதப்படும் முஹம்மத் நபியவர்களின் வாழ்வியலைப் பின்பற்றும் அனைத்து இஸ்லாமியர்களும் எதிர்பார்க்கும் ஈருலக வெற்றியையும் இறை நெருக்கத்தையும் அடைய, இந்த ஹஜ் பண்டிகைக் காலம் உதவும்.

புனித அல் குர்ஆனையும் முஹம்மத் நபியவர்களின் வாழ்க்கைத் தத்துவத்தையும் பின்பற்றும் இஸ்லாமியர்களான உங்கள் அனைவருக்கும், இந்த ஹஜ் பெருநாள், இறை நெருக்கத்தையும் ஆன்மீக உயர்ச்சியையும் பெற்றுத்தரும் உன்னதத் திருநாளாக அமைய  புனித ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இறைதூதர்கள் நபீ இப்ராஹீம்(அலை), நபீ இஸ்மாயீல்,  மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோரின் மாபெரும் தியாகத்தை நினைவுகூறும் வகையில் தியாகத் திருநாள் உலகமெங்கும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்கள் ஒன்று திரண்டு புனித மக்கா நகரிலும் அரபா பெரு வெளியிலும் பிராத்தனைசெய்யும் இந்நாளை அடைந்துகொள்ளும் பாக்கியத்தை இறைவன் எங்களுக்கும் வழங்கியுள்ளான். 

இந்த தியாகத் திருநாளில் நமது நாட்டில் சகோதரத்துவமும், சமத்துவமும் தழைத்து ஓங்குவதற்கும், நமது நாடு பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கும் தியாகம் செய்ய உறுதியெடுத்துக்கொள்வோமாக.

இந்த நன்னாளில் எல்லா சமூகங்களுடனும் ஒற்றுமையுடனும் சந்தோஷமாகவும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாகவும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்வானாக எனப்பிரார்த்திப்பதோடு, இந்த நன்னாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.


எல்லா சமூகங்களுடனும் ஒற்றுமையுடனும் சந்தோஷமாகவும் அச்சமுமின்றி வாழ வேண்டும் - யாழ் மாநகர சபை உறுப்பினரின் பெருநாள் வாழ்த்துச்செய்தி எல்லா சமூகங்களுடனும் ஒற்றுமையுடனும் சந்தோஷமாகவும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாகவும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்ஹஜ் பெருநாள், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளாகும். இஸ்லாமிய சமூகம், தமது கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாகவும் இதனை நான் பார்க்கிறேன்.அனைத்து சமயத் தலைவர்களும் மனித சமூகத்தின் நல்வாழ்வுக்குத் தேவையான உலகப் பொதுவான நன்நெறிகளை எமக்குத் தந்துள்ளனர். சமூக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும், அவற்றின் பங்களிப்பு மகத்தானதாகும். இது, உலகின் தொடர்ச்சியான நல் இருப்புக்கு இன்றியமையாத காரணியாகும்.இஸ்லாத்தின் இறுதித் தூதராகக் கருதப்படும் முஹம்மத் நபியவர்களின் வாழ்வியலைப் பின்பற்றும் அனைத்து இஸ்லாமியர்களும் எதிர்பார்க்கும் ஈருலக வெற்றியையும் இறை நெருக்கத்தையும் அடைய, இந்த ஹஜ் பண்டிகைக் காலம் உதவும்.புனித அல் குர்ஆனையும் முஹம்மத் நபியவர்களின் வாழ்க்கைத் தத்துவத்தையும் பின்பற்றும் இஸ்லாமியர்களான உங்கள் அனைவருக்கும், இந்த ஹஜ் பெருநாள், இறை நெருக்கத்தையும் ஆன்மீக உயர்ச்சியையும் பெற்றுத்தரும் உன்னதத் திருநாளாக அமைய  புனித ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இறைதூதர்கள் நபீ இப்ராஹீம்(அலை), நபீ இஸ்மாயீல்,  மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோரின் மாபெரும் தியாகத்தை நினைவுகூறும் வகையில் தியாகத் திருநாள் உலகமெங்கும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்கள் ஒன்று திரண்டு புனித மக்கா நகரிலும் அரபா பெரு வெளியிலும் பிராத்தனைசெய்யும் இந்நாளை அடைந்துகொள்ளும் பாக்கியத்தை இறைவன் எங்களுக்கும் வழங்கியுள்ளான். இந்த தியாகத் திருநாளில் நமது நாட்டில் சகோதரத்துவமும், சமத்துவமும் தழைத்து ஓங்குவதற்கும், நமது நாடு பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கும் தியாகம் செய்ய உறுதியெடுத்துக்கொள்வோமாக.இந்த நன்னாளில் எல்லா சமூகங்களுடனும் ஒற்றுமையுடனும் சந்தோஷமாகவும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாகவும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்வானாக எனப்பிரார்த்திப்பதோடு, இந்த நன்னாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement