"வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஆணை தேசிய மக்கள் சக்தி கட்சிக்குக் கிடைக்கும். மறுநாள் 22ஆம் திகதி நாம் ஆட்சிப்பீடம் ஏறுவோம்."
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கிரிபத்கொடையில் நேற்று நடைபெற்ற கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"அரசின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றும். ஊழல், மோசடியை ஒழிக்கும்.
வரி செலுத்தாமல் உள்ள பலரிடமிருந்து 169 பில்லியனைப் பெற முடியும். அவர்களை அடையாளம் கண்டுள்ளோம். அதற்கான நடவடிக்கைளை முன்னெடுப்போம்." - என்றார்.
செப்டெம்பர் 22 இல் அரியணை ஏறுவோம்- பரப்புரைக் கூட்டத்தில் அநுர நம்பிக்கையுடன் தெரிவிப்பு "வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஆணை தேசிய மக்கள் சக்தி கட்சிக்குக் கிடைக்கும். மறுநாள் 22ஆம் திகதி நாம் ஆட்சிப்பீடம் ஏறுவோம்."இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.கிரிபத்கொடையில் நேற்று நடைபெற்ற கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,"அரசின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றும். ஊழல், மோசடியை ஒழிக்கும்.வரி செலுத்தாமல் உள்ள பலரிடமிருந்து 169 பில்லியனைப் பெற முடியும். அவர்களை அடையாளம் கண்டுள்ளோம். அதற்கான நடவடிக்கைளை முன்னெடுப்போம்." - என்றார்.