• Sep 28 2024

வடக்கு கிழக்கில் ஊழல் அற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம்-இன்பராசா உறுதி..!

Sharmi / Sep 28th 2024, 3:08 pm
image

Advertisement

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள், ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் அனுசரணையுடன், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி சுயேட்சையாக வடக்கு கிழக்கில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர்  கே.இன்பராசா தெரிவித்தார்.

மன்னாரில் இன்றைய தினம் (28) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது அதிகூடிய சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட உள்ளோம்.

தமிழ் மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். குறித்த தேர்தல் குறித்து நாங்கள் உங்களை தேடி வருவோம். எங்களுக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும்.வடக்கு கிழக்கு மக்களுக்காக நாங்கள் எங்கள் உயிரையே அர்ப்பணித்தோம். அங்கவீனமாக்கப்பட்டுள்ளோம்.அனாதரவாக்கப்பட்டுள்ளோம்.

எனவே முன்னாள் விடுதலைப் புலிகள் ஆகிய நாங்கள் இத்தேர்தலில் களமிறங்க உள்ளோம்.

தற்போதைய ஜனாதிபதியின் ஊழல் அற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை போல் வடக்கு கிழக்கில் ஊழல் அற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம்.

மன்னார் மாவட்ட முன்னாள் விடுதலைப் புலிகளும் எங்களுடன் இணைந்துள்ளனர்.

எனவே, தமிழ் மக்களும் எங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.


வடக்கு கிழக்கில் ஊழல் அற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம்-இன்பராசா உறுதி. எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள், ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் அனுசரணையுடன், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி சுயேட்சையாக வடக்கு கிழக்கில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர்  கே.இன்பராசா தெரிவித்தார்.மன்னாரில் இன்றைய தினம் (28) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது அதிகூடிய சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட உள்ளோம்.தமிழ் மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். குறித்த தேர்தல் குறித்து நாங்கள் உங்களை தேடி வருவோம். எங்களுக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும்.வடக்கு கிழக்கு மக்களுக்காக நாங்கள் எங்கள் உயிரையே அர்ப்பணித்தோம். அங்கவீனமாக்கப்பட்டுள்ளோம்.அனாதரவாக்கப்பட்டுள்ளோம்.எனவே முன்னாள் விடுதலைப் புலிகள் ஆகிய நாங்கள் இத்தேர்தலில் களமிறங்க உள்ளோம்.தற்போதைய ஜனாதிபதியின் ஊழல் அற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை போல் வடக்கு கிழக்கில் ஊழல் அற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம்.மன்னார் மாவட்ட முன்னாள் விடுதலைப் புலிகளும் எங்களுடன் இணைந்துள்ளனர்.எனவே, தமிழ் மக்களும் எங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement