புலிகளின் கனவை நாங்கள் நனவாக்குவோம் என்றும் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசிய தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம், இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயர் வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் உறுதி அளிப்பாரா? என வல்வெட்டித்துறை நகர சபை வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியிருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு தேர்தல் பிரச்சார பாடல் ஒன்றில் , தேசிய தலைவருக்கு சிலை வைப்போம், இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயர்களை பதிப்போம் என குறிப்பிட்டுள்ளார்கள்.
குறித்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், பாடலில் குறிப்பிட்டுள்ளது போன்று , செய்வார்கள் எனில் , அதனை கடற்தொழில் அமைச்சர் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தட்டும்.
அதனை விடுத்து, ஆதரவு பாடல் என பாடலில் யார் குறிப்பிட்டார்கள் என குறிப்பிடாமல் மக்களை குழப்பும் செயலில் ஈடுபட வேண்டாம் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது இதுதொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,
இதற்கும் தமது கட்சிக்கும் எதுவித தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.
இதே வேளை புலிகளின் கனவை நாங்கள் நனவாக்குவோம் என்றும் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புலிகளின் கனவை நாங்கள் நனவாக்குவோம்; நகைகளும் மக்களிடம் ஒப்படைக்கப்படும் மீன்பிடி அமைச்சர் யாழில் பகிரங்கம் புலிகளின் கனவை நாங்கள் நனவாக்குவோம் என்றும் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசிய தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம், இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயர் வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் உறுதி அளிப்பாரா என வல்வெட்டித்துறை நகர சபை வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியிருந்தார்.தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு தேர்தல் பிரச்சார பாடல் ஒன்றில் , தேசிய தலைவருக்கு சிலை வைப்போம், இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயர்களை பதிப்போம் என குறிப்பிட்டுள்ளார்கள். குறித்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், பாடலில் குறிப்பிட்டுள்ளது போன்று , செய்வார்கள் எனில் , அதனை கடற்தொழில் அமைச்சர் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தட்டும். அதனை விடுத்து, ஆதரவு பாடல் என பாடலில் யார் குறிப்பிட்டார்கள் என குறிப்பிடாமல் மக்களை குழப்பும் செயலில் ஈடுபட வேண்டாம் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது இதுதொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,இதற்கும் தமது கட்சிக்கும் எதுவித தொடர்பும் இல்லை என தெரிவித்தார். இதே வேளை புலிகளின் கனவை நாங்கள் நனவாக்குவோம் என்றும் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.