• Nov 26 2024

ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளான எவரையும் மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்- பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பு..!

Sharmi / Sep 25th 2024, 10:37 am
image

ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளான எவரையும் மீண்டும் கட்சியில் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருகின்றது.

அந்தவகையில்,  பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு கட்சி எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பது தொடர்பில் நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வார்களா என்பது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான எவரையும் மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கட்சி இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகிய பலர் மீண்டும் கட்சியில் இணைக்குமாறு  கோரிக்கை விடுத்துள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளான எவரையும் மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்- பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பு. ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளான எவரையும் மீண்டும் கட்சியில் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருகின்றது.அந்தவகையில்,  பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு கட்சி எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பது தொடர்பில் நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வார்களா என்பது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான எவரையும் மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கட்சி இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகிய பலர் மீண்டும் கட்சியில் இணைக்குமாறு  கோரிக்கை விடுத்துள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement