ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து யாரும் வெளியேற மாட்டோம். பொய்யான பிரசாரங்கள் மூலம் 15, 20 பேர் வெளியேறுவார்கள் என்று சொன்னாலும், ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு யாரும் வெளியேற மாட்டனர். மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாட், இராதாகிருஷ்ணன் போன்றே தானும் சஜித் பிரேமதாசவுடனே இருக்கிறோம். தேர்தல் காலம் என்பதனால் பல்வேறு பொய்யான பிரச்சாரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இன்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்று (19) இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது கருது வெளியிட்டுள்ள அவர், அடுத்த தேர்தலில் சஜித் பிரேமதாச அவர்களே வெற்றி பெறுவார்.எனவும் மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தி சொல்லும் அளவுக்கு அவ்வாறு சவால் எதுவும் இல்லை. சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் சஜித் பிரேமதாசவுடனே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மே தின கூட்டங்களுக்கு வருபவர்களை வைத்து தேர்தல் முடிவுகளை கணிப்பிட முடியாது. மே தினக் கூட்டங்களுக்கு சமூகமளிக்காத ஏராளமானோர் இருக்கின்றனர். எனவே, மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை வைத்து தேர்தலில் வெற்றியாளரை தீர்மானிக்க முடியாது என பழனி திகாம்பரம் இங்கு தெரிவித்தார்.
“கோட்டாபய மற்றும் திருடர்கள் குழுவோடு இணையாது நாட்டை பொறுப்பேற்க நினைத்தார்” என்றே சஜித் பிரேமதாச நாட்டை பெறுப்பேற்க வில்லை என்று குற்றம் சாட்டுபவர்களுக்கு கூற வேண்டியுள்ளது. “ரணில் விக்கிரமசிங்க போன்ற திருடர்களை பாதுகாக்க விரும்பாததாலயே” சஜித் பிரேமதாச நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. திருடர்களை இல்லாதொழிக்கவே சஜித் பிரேமதாச விரும்புகிறார் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள்ச் சம்பளம் 1700 என ஜனாதிபதியும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் வர்த்தமானியில் வெளியிட்டிருந்த போதும், மறுநாள் கம்பனிகள் அவ்வாறு ஊதியத் தொகை கொடுக்க முடியாது என்று கூறியபோது, ஊதியத் தொகை தீர்மானித்த பிரகாரமே கொடுக்க வேண்டும் என்று ஊடகங்கள் மூலம் கூறியும், இதுவரை கொடுக்கப்படவில்லை. வாக்குகளைப் பெறுவதற்காகச் சொல்லப்பட்ட கதையே இதுவாகும். இது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இப்படியே போனால் இந்த தோட்ட மக்களுக்கு சரியான சம்பளமும் கிடைக்காது. பொருட்களின் விலைகள் அதிகரித்து, வாழ்க்கையை கொண்டு நடத்துவது சிரமமான காரியமாகி விட்டதால், இப்பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை மக்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களிடம் இருந்து கிலோ கணக்குக்கு கொழுந்துகளை எடுத்தால் அதிக இலாபம் ஈட்ட முடியும். இவ்வாறு மக்களை ஏமாற்றக் கூடாது. உரிய ஊதியத்தை வழங்க முடியாது என தோட்டக் கம்பனிகள் கூறுவதால், தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்காது போகிறது. வர்த்தமானி வெளியிடப்பட்டாலும், அந்த வர்த்தமானிக்கு கூட எவ்வித பெறுமதியும் கிடைக்கவில்லை என பழனி திகாம்பரம் இங்கு தெரிவித்தார்.
நாம் சஜித்தை விட்டு போக மாட்டோம். எமது ஆதரவு ஐக்கிய மக்கள் சக்திக்கே - பழனி திகாம்பரம் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து யாரும் வெளியேற மாட்டோம். பொய்யான பிரசாரங்கள் மூலம் 15, 20 பேர் வெளியேறுவார்கள் என்று சொன்னாலும், ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு யாரும் வெளியேற மாட்டனர். மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாட், இராதாகிருஷ்ணன் போன்றே தானும் சஜித் பிரேமதாசவுடனே இருக்கிறோம். தேர்தல் காலம் என்பதனால் பல்வேறு பொய்யான பிரச்சாரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.இன்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்று (19) இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது கருது வெளியிட்டுள்ள அவர், அடுத்த தேர்தலில் சஜித் பிரேமதாச அவர்களே வெற்றி பெறுவார்.எனவும் மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தி சொல்லும் அளவுக்கு அவ்வாறு சவால் எதுவும் இல்லை. சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் சஜித் பிரேமதாசவுடனே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மே தின கூட்டங்களுக்கு வருபவர்களை வைத்து தேர்தல் முடிவுகளை கணிப்பிட முடியாது. மே தினக் கூட்டங்களுக்கு சமூகமளிக்காத ஏராளமானோர் இருக்கின்றனர். எனவே, மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை வைத்து தேர்தலில் வெற்றியாளரை தீர்மானிக்க முடியாது என பழனி திகாம்பரம் இங்கு தெரிவித்தார்.“கோட்டாபய மற்றும் திருடர்கள் குழுவோடு இணையாது நாட்டை பொறுப்பேற்க நினைத்தார்” என்றே சஜித் பிரேமதாச நாட்டை பெறுப்பேற்க வில்லை என்று குற்றம் சாட்டுபவர்களுக்கு கூற வேண்டியுள்ளது. “ரணில் விக்கிரமசிங்க போன்ற திருடர்களை பாதுகாக்க விரும்பாததாலயே” சஜித் பிரேமதாச நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. திருடர்களை இல்லாதொழிக்கவே சஜித் பிரேமதாச விரும்புகிறார் என அவர் மேலும் தெரிவித்தார்.மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள்ச் சம்பளம் 1700 என ஜனாதிபதியும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் வர்த்தமானியில் வெளியிட்டிருந்த போதும், மறுநாள் கம்பனிகள் அவ்வாறு ஊதியத் தொகை கொடுக்க முடியாது என்று கூறியபோது, ஊதியத் தொகை தீர்மானித்த பிரகாரமே கொடுக்க வேண்டும் என்று ஊடகங்கள் மூலம் கூறியும், இதுவரை கொடுக்கப்படவில்லை. வாக்குகளைப் பெறுவதற்காகச் சொல்லப்பட்ட கதையே இதுவாகும். இது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.இப்படியே போனால் இந்த தோட்ட மக்களுக்கு சரியான சம்பளமும் கிடைக்காது. பொருட்களின் விலைகள் அதிகரித்து, வாழ்க்கையை கொண்டு நடத்துவது சிரமமான காரியமாகி விட்டதால், இப்பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை மக்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களிடம் இருந்து கிலோ கணக்குக்கு கொழுந்துகளை எடுத்தால் அதிக இலாபம் ஈட்ட முடியும். இவ்வாறு மக்களை ஏமாற்றக் கூடாது. உரிய ஊதியத்தை வழங்க முடியாது என தோட்டக் கம்பனிகள் கூறுவதால், தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்காது போகிறது. வர்த்தமானி வெளியிடப்பட்டாலும், அந்த வர்த்தமானிக்கு கூட எவ்வித பெறுமதியும் கிடைக்கவில்லை என பழனி திகாம்பரம் இங்கு தெரிவித்தார்.