• Nov 19 2024

நிற பேதங்கள், கட்சி பேதங்கள் இன்றி மனித நேயத்தின் நாமத்தினால் அனைவரையும் பாதுகாப்போம்- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு!

Tamil nila / Sep 17th 2024, 6:59 pm
image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகள் அத்தோடு கட்சிகளைச் சாராத குழுக்களில் உள்ளவர்கள் என அனைவரையும் நாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு மனிதநேயத்தின் நாமத்தினால் பாதுகாப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  தெரிவித்தார்.


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 65 ஆவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  தலைமையில் ஹெட்டிபொல நகரில் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் கூறுகையில்,

"வறுமையை ஒழிக்கும் முகமாக அனைத்து வரிய குடும்பங்களுக்கும் 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 20 ஆயிரம் ரூபா வீதம் முதலீடு, உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு மற்றும் ஏற்றுமதி ஆகிய பிரிவுகளுக்குள்ளடக்கி நிவாரணங்களை வழங்குவோம். எவரும் தொடர்ந்தும் வறியவர்களாக இருப்பதற்கு விருப்பமில்லாதமயால் நாம் வறுமையே ஒழிப்போம்.



தமக்கென்று வீடும் காணியுமில்லாதவர்களுக்கு வீட்டையும் காணிக்கான உரிமையும் பெற்றுக் கொடுப்போம்.

50 கிலோ கிராம் உள்ள உர மூடை ஒன்றை 5000 ரூபாவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும். பெரிய வெங்காய உற்பத்தியாளர்களையும் பாதுகாப்போம். பெரிய வெங்காயம், சோளம், உருளைக்கிழங்கு என்பன அறுவடை செய்யப்படுகின்ற போது ரணில் விக்கிரமசிங்க அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கின்றார். விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாக்கின்ற நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தி அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும்.


விவசாயிகளுக்கு நிவாரண அடிப்படையில் உரம் வழங்குகின்ற அதேவேளை விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், ஓட்டோ   உரிமையாளர்களுக்கும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து பஸ் உரிமையாளர்களுக்கும், சக்தி அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்குவோம். 

இந்த எரிபொருள் நிவாரணம் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. எரிபொருள் நிவாரணத்தை தொழிலாளர் வர்க்கத்திற்கே வழங்குவோம். செல்வந்தர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் எரிபொருள் நிவாரணம் வழங்க வேண்டிய தேவை இல்லை.

இந்த நாட்டில் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களை மையப்படுத்தி ஜனாதிபதி அபிவிருத்தி செயலணி ஒன்றை உருவாக்குவோம். அதன் ஊடாக அனைத்து நிர்வாக மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிப்போம். அத்தோடு ஜனாதிபதியை மக்கள் தொடர்பு கொள்வதற்கு தனியான அலகொன்றையும் நிறுவுவோம். 


மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முறையான தொடர்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு கிராமங்களையும் நகரங்களையும் அபிவிருத்தியடையச் செய்யும் கம் உதாவ நகர உதாவ வேலை திட்டங்களை மேற்கொள்வோம்." - என்றார்.

நிற பேதங்கள், கட்சி பேதங்கள் இன்றி மனித நேயத்தின் நாமத்தினால் அனைவரையும் பாதுகாப்போம்- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகள் அத்தோடு கட்சிகளைச் சாராத குழுக்களில் உள்ளவர்கள் என அனைவரையும் நாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு மனிதநேயத்தின் நாமத்தினால் பாதுகாப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  தெரிவித்தார்.2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 65 ஆவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  தலைமையில் ஹெட்டிபொல நகரில் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்,"வறுமையை ஒழிக்கும் முகமாக அனைத்து வரிய குடும்பங்களுக்கும் 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 20 ஆயிரம் ரூபா வீதம் முதலீடு, உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு மற்றும் ஏற்றுமதி ஆகிய பிரிவுகளுக்குள்ளடக்கி நிவாரணங்களை வழங்குவோம். எவரும் தொடர்ந்தும் வறியவர்களாக இருப்பதற்கு விருப்பமில்லாதமயால் நாம் வறுமையே ஒழிப்போம்.தமக்கென்று வீடும் காணியுமில்லாதவர்களுக்கு வீட்டையும் காணிக்கான உரிமையும் பெற்றுக் கொடுப்போம்.50 கிலோ கிராம் உள்ள உர மூடை ஒன்றை 5000 ரூபாவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும். பெரிய வெங்காய உற்பத்தியாளர்களையும் பாதுகாப்போம். பெரிய வெங்காயம், சோளம், உருளைக்கிழங்கு என்பன அறுவடை செய்யப்படுகின்ற போது ரணில் விக்கிரமசிங்க அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கின்றார். விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாக்கின்ற நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தி அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும்.விவசாயிகளுக்கு நிவாரண அடிப்படையில் உரம் வழங்குகின்ற அதேவேளை விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், ஓட்டோ   உரிமையாளர்களுக்கும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து பஸ் உரிமையாளர்களுக்கும், சக்தி அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்குவோம். இந்த எரிபொருள் நிவாரணம் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. எரிபொருள் நிவாரணத்தை தொழிலாளர் வர்க்கத்திற்கே வழங்குவோம். செல்வந்தர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் எரிபொருள் நிவாரணம் வழங்க வேண்டிய தேவை இல்லை.இந்த நாட்டில் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களை மையப்படுத்தி ஜனாதிபதி அபிவிருத்தி செயலணி ஒன்றை உருவாக்குவோம். அதன் ஊடாக அனைத்து நிர்வாக மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிப்போம். அத்தோடு ஜனாதிபதியை மக்கள் தொடர்பு கொள்வதற்கு தனியான அலகொன்றையும் நிறுவுவோம். மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முறையான தொடர்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு கிராமங்களையும் நகரங்களையும் அபிவிருத்தியடையச் செய்யும் கம் உதாவ நகர உதாவ வேலை திட்டங்களை மேற்கொள்வோம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement