ஈ 8விசா பத்திரத்தின் கீழ் தொழில் வழங்குவதாக தெரிவித்து பணம் அறவிட்டுள்ள வெளிநாட்டு தொழில் முகவர் நிறுவனங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டால் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். ஈ8 விசா மூலம் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்ல எந்த நாட்டுடனும் அரசாங்கம் ஒப்பந்தம் செய்ததில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஈ8 விசா பெற்றுக்கொண்டு கொரியாவுக்கு தொழிலுக்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் சிலர் திங்கட்கிழமை (11) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (12) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொரியாவுக்கான ஈ8 விசா ஊடாக தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தம் சட்ட ரீதியானதல்ல, அதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சம்பந்தப்படவில்லை. என்றாலும் அது தொடர்பில் ஒருசில தரப்பினர் கொரியாவில் தொழிலை எதிர்பார்த்து இருப்பவர்களை தூண்டிவிட்டு, பணியத்தின் மீது குற்றம் சுமத்தி அவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினர்.
ஈ8 விசா காலாவதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துக்கு பணியகத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அவ்வாறான விசா காலாவதியானமைக்கு பணியகத்துக்கு பொறுப்புக்கூற முடியாது. அதேநேரம் அவ்வாறான விசா முறைக்கு பணியகத்துக்கு அனுமதி வழங்கி இருக்கவில்லை. சட்டத்துக்கு முரணாக கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தம் ஒன்றை சட்ட ரீதியாக்குவதற்கு எந்த உரிமையும் இல்லை.
அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்துக்கு தொழில் கட்டளை இல்லாமல் பணம் அறவிடுதல் மற்றும் பயண அனுமதி பத்திரத்தை சேகரிப்பது சட்ட விரோதமாகும். என்றாலும் கொரிவுக்கான ஈ8 விசாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் அறவிடுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு மேற்கொண்டிருந்தால் அது சட்டவிரோதமாகும்.
ஈ8 விசாவின் கீழ் தொழிலுக்காக ஆட்களை அனுப்ப முடியுமாகி இருப்பது, இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் பிரகாரம் மாத்திரமாகும். ஆனால் அவ்வாறான ஒப்பந்தம் இதுவரை கைச்சத்திட்டதில்லை.
அதனால் ஈ8 விசாவின் கீழ் தொழில் வழங்குவதாக தெரிவித்து பணம் அறவிட்டுள்ள வெளிநாட்டு தொழில் முகவர் நிறுவனங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டால் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். அவர்கள் தொடர்பில் தராதரம் பார்க்காமல் தண்டனை பெற்றுக்கொடுக்க பணியகம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
தொழில் பெற்றுத்தருவதாக பணம் அறவிடும் முகவர் நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்போம் - கோஷல விக்ரமசிங்க ஈ 8விசா பத்திரத்தின் கீழ் தொழில் வழங்குவதாக தெரிவித்து பணம் அறவிட்டுள்ள வெளிநாட்டு தொழில் முகவர் நிறுவனங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டால் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். ஈ8 விசா மூலம் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்ல எந்த நாட்டுடனும் அரசாங்கம் ஒப்பந்தம் செய்ததில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார்.ஈ8 விசா பெற்றுக்கொண்டு கொரியாவுக்கு தொழிலுக்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் சிலர் திங்கட்கிழமை (11) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (12) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,கொரியாவுக்கான ஈ8 விசா ஊடாக தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தம் சட்ட ரீதியானதல்ல, அதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சம்பந்தப்படவில்லை. என்றாலும் அது தொடர்பில் ஒருசில தரப்பினர் கொரியாவில் தொழிலை எதிர்பார்த்து இருப்பவர்களை தூண்டிவிட்டு, பணியத்தின் மீது குற்றம் சுமத்தி அவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினர்.ஈ8 விசா காலாவதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துக்கு பணியகத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அவ்வாறான விசா காலாவதியானமைக்கு பணியகத்துக்கு பொறுப்புக்கூற முடியாது. அதேநேரம் அவ்வாறான விசா முறைக்கு பணியகத்துக்கு அனுமதி வழங்கி இருக்கவில்லை. சட்டத்துக்கு முரணாக கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தம் ஒன்றை சட்ட ரீதியாக்குவதற்கு எந்த உரிமையும் இல்லை.அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்துக்கு தொழில் கட்டளை இல்லாமல் பணம் அறவிடுதல் மற்றும் பயண அனுமதி பத்திரத்தை சேகரிப்பது சட்ட விரோதமாகும். என்றாலும் கொரிவுக்கான ஈ8 விசாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் அறவிடுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு மேற்கொண்டிருந்தால் அது சட்டவிரோதமாகும்.ஈ8 விசாவின் கீழ் தொழிலுக்காக ஆட்களை அனுப்ப முடியுமாகி இருப்பது, இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் பிரகாரம் மாத்திரமாகும். ஆனால் அவ்வாறான ஒப்பந்தம் இதுவரை கைச்சத்திட்டதில்லை.அதனால் ஈ8 விசாவின் கீழ் தொழில் வழங்குவதாக தெரிவித்து பணம் அறவிட்டுள்ள வெளிநாட்டு தொழில் முகவர் நிறுவனங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டால் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். அவர்கள் தொடர்பில் தராதரம் பார்க்காமல் தண்டனை பெற்றுக்கொடுக்க பணியகம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.