• Nov 22 2024

யாழ்ப்பாணத்தில் 12 வாக்களிப்பு நிலையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றம்

Chithra / Nov 13th 2024, 7:24 am
image


யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 12 வாக்களிப்பு நிலையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக இயங்கிய 12  நிலையங்களே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளன.

இதன்படி, ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் வேலணை மத்திய கல்லூரி விடுதி வாக்களிப்பு நிலையம் சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலய நால்வர் மணிமண்டபத்துக்கும், நாரந்தனை தெற்கு பொது நோக்கு மண்டப வாக்களிப்பு நிலையம் நாரந்தனை தெற்கு கிராம சக்தி பொது மண்டபத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலய மண்டப இலக்கம் 1 வாக்களிப்பு நிலையம் வடலியடைப்பு சனசமூக நிலையத்துக்கும், அராலி வடக்கு அமெரிக்க மிஷன் பாடசாலை வாக்களிப்பு நிலையம் அராலி இந்து கல்லூரிக்கும் மாற்றப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வயாவிளான் மத்திய கல்லூரி மண்டப இலக்கம் 2 வாக்களிப்பு நிலையம் பலாலி வடக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தாவடி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை மண்டப இலக்கம் 1 வாக்களிப்பு நிலையம் தாவடி தெற்கு சனசமூக நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோப்பாய் தேர்தல் தொகுதியில் அச்சுவேலி மத்திய கல்லூரி மண்டப இலக்கம் 2 வாக்களிப்பு நிலையம் அச்சுவேலி ஆரம்பப் பாடசாலைக்கும், அச்சுவேலி விக்னேஸ்வரா சனசமூக நிலைய வாக்களிப்பு நிலையம் விக்னேஸ்வரா முன்பள்ளிக்கும் மாற்றப்பட்டுள்ளன.

உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இமையாணன் மாந்தோட்ட சிவஞான வைரவர் ஆலய மண்டப வாக்களிப்பு நிலையம் உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கும், கரணவாய் சக்கலாவத்தை பொது நோக்கு மண்டபத்தில் இயங்கிய வாக்களிப்பு நிலையம் கொற்றாவத்தை செட்டித்தறை சித்தி விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன.

நல்லூர் தேர்தல் தொகுதியில் கொக்குவில் மேற்கு கிறிஸ்தவாலய தமிழ்க் கலவன்பாடசாலை மண்டப இலக்கம் 1 இல் இயங்கிய வாக்களிப்பு நிலையம் வீரமாபிடாரி அம்பாள் ஆலய மண்டபத்துக்கும், நாவலர் கலாசார மண்டபத்தில் இயங்கிய வாக்களிப்பு நிலையம் அத்தியடி கணபதி கலாசார மண்டபத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 12 வாக்களிப்பு நிலையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 12 வாக்களிப்பு நிலையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக இயங்கிய 12  நிலையங்களே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளன.இதன்படி, ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் வேலணை மத்திய கல்லூரி விடுதி வாக்களிப்பு நிலையம் சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலய நால்வர் மணிமண்டபத்துக்கும், நாரந்தனை தெற்கு பொது நோக்கு மண்டப வாக்களிப்பு நிலையம் நாரந்தனை தெற்கு கிராம சக்தி பொது மண்டபத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன.வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலய மண்டப இலக்கம் 1 வாக்களிப்பு நிலையம் வடலியடைப்பு சனசமூக நிலையத்துக்கும், அராலி வடக்கு அமெரிக்க மிஷன் பாடசாலை வாக்களிப்பு நிலையம் அராலி இந்து கல்லூரிக்கும் மாற்றப்பட்டுள்ளன.காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வயாவிளான் மத்திய கல்லூரி மண்டப இலக்கம் 2 வாக்களிப்பு நிலையம் பலாலி வடக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தாவடி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை மண்டப இலக்கம் 1 வாக்களிப்பு நிலையம் தாவடி தெற்கு சனசமூக நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.கோப்பாய் தேர்தல் தொகுதியில் அச்சுவேலி மத்திய கல்லூரி மண்டப இலக்கம் 2 வாக்களிப்பு நிலையம் அச்சுவேலி ஆரம்பப் பாடசாலைக்கும், அச்சுவேலி விக்னேஸ்வரா சனசமூக நிலைய வாக்களிப்பு நிலையம் விக்னேஸ்வரா முன்பள்ளிக்கும் மாற்றப்பட்டுள்ளன.உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இமையாணன் மாந்தோட்ட சிவஞான வைரவர் ஆலய மண்டப வாக்களிப்பு நிலையம் உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கும், கரணவாய் சக்கலாவத்தை பொது நோக்கு மண்டபத்தில் இயங்கிய வாக்களிப்பு நிலையம் கொற்றாவத்தை செட்டித்தறை சித்தி விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன.நல்லூர் தேர்தல் தொகுதியில் கொக்குவில் மேற்கு கிறிஸ்தவாலய தமிழ்க் கலவன்பாடசாலை மண்டப இலக்கம் 1 இல் இயங்கிய வாக்களிப்பு நிலையம் வீரமாபிடாரி அம்பாள் ஆலய மண்டபத்துக்கும், நாவலர் கலாசார மண்டபத்தில் இயங்கிய வாக்களிப்பு நிலையம் அத்தியடி கணபதி கலாசார மண்டபத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement