• Nov 23 2024

இந்தியாவிற்கு எல்லை தாண்டி செல்லும் இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் -ஈ.பி.டி.பி கட்சியின் இணைப்பாளர் தெரிவிப்பு!

Tamil nila / Jun 9th 2024, 7:48 am
image

சீரற்ற காலநிலை காரணமாக இந்திய எல்லைக்குள் சென்று இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் சிறைப்படுத்தப்பட்ட நிலை காணப்படுவதாகவும், இனி வரும் காலங்களில் அவ்வாறான மீனவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்லஸ்தேவாநந்தா ஊடாக விடுவித்து நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (E.P.D.P.) மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளரும் அமைச்சரின் மாவட்ட இணைப்பாளருமான சுப்பையா  சந்துரு தெரிவித்துள்ளார்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (E.P.D.P) மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நேற்றைய தினம் மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

மன்னார் -தலைமன்னார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 2023 ஆம் ஆண்டு 11 மாதம் இந்திய கடலோர காவல் படையினரால் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்திய சிறைகளில் வாடி இருந்தார்கள். அவர்களை விடுவிக்க கோரி அவர்களுடைய  குடும்பத்தினர் எமது கட்சியை நாடி இருந்தார்கள்.

நாங்கள் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தோம்.  இதனை அடுத்து அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த செவ்வாய் கிழமை அனைத்து மீனவர்களும் நாடு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதே  போல் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் விளைவுகள் காரணமாக இந்திய எல்லையை சென்றடைந்து இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் பல காலங்கள் சிறையில் வாடும் நிலை காணப்பட்டது.

ஆனால் இனிமேல் அவ்வாறான பிரச்சினைகள் காணப்படும் பட்சத்தில் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டால் நாங்கள் நிச்சயம் அமைச்சரை தொடர்பு கொண்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

இதன் போது விடுதலையான தலைமன்னாரை சேர்ந்த 5 மீனவர்களும் அமைச்சரின் மன்னார் அலுவலகத்திற்கு வருகை தந்து நன்றி தெரிவித்ததோடு,ஊடகங்கள் முன் கருத்துக்களை முன் வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.


இந்தியாவிற்கு எல்லை தாண்டி செல்லும் இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் -ஈ.பி.டி.பி கட்சியின் இணைப்பாளர் தெரிவிப்பு சீரற்ற காலநிலை காரணமாக இந்திய எல்லைக்குள் சென்று இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் சிறைப்படுத்தப்பட்ட நிலை காணப்படுவதாகவும், இனி வரும் காலங்களில் அவ்வாறான மீனவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்லஸ்தேவாநந்தா ஊடாக விடுவித்து நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (E.P.D.P.) மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளரும் அமைச்சரின் மாவட்ட இணைப்பாளருமான சுப்பையா  சந்துரு தெரிவித்துள்ளார்ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (E.P.D.P) மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நேற்றைய தினம் மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,,மன்னார் -தலைமன்னார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 2023 ஆம் ஆண்டு 11 மாதம் இந்திய கடலோர காவல் படையினரால் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்திய சிறைகளில் வாடி இருந்தார்கள். அவர்களை விடுவிக்க கோரி அவர்களுடைய  குடும்பத்தினர் எமது கட்சியை நாடி இருந்தார்கள்.நாங்கள் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தோம்.  இதனை அடுத்து அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த செவ்வாய் கிழமை அனைத்து மீனவர்களும் நாடு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.அதே  போல் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் விளைவுகள் காரணமாக இந்திய எல்லையை சென்றடைந்து இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் பல காலங்கள் சிறையில் வாடும் நிலை காணப்பட்டது.ஆனால் இனிமேல் அவ்வாறான பிரச்சினைகள் காணப்படும் பட்சத்தில் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டால் நாங்கள் நிச்சயம் அமைச்சரை தொடர்பு கொண்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.இதன் போது விடுதலையான தலைமன்னாரை சேர்ந்த 5 மீனவர்களும் அமைச்சரின் மன்னார் அலுவலகத்திற்கு வருகை தந்து நன்றி தெரிவித்ததோடு,ஊடகங்கள் முன் கருத்துக்களை முன் வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement