• Apr 02 2025

2029 இல் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம்! நாமல் சூளுரை

Chithra / Mar 31st 2025, 9:10 am
image

 

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று  நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அதிகளவான உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை நாங்கள் கைப்பற்றுவோம். 

2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை கைப்பற்றியதை போன்று இம்முறையும் நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றுவோம்.

தேசிய பொருளாதாரத்தை கைப்பற்ற வேண்டுமாயின் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். எமது ஆட்சியில்  கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்திகளுக்கு  விசேட திட்டங்களை முன்னெடுத்தோம். ஆகவே கிராமிய மக்கள் கிராமத்தின் அதிகாரத்தை மீண்டும் எமக்கு ஒப்படைப்பார்கள்.  என்றார்.

2029 இல் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம் நாமல் சூளுரை  2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று  நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அதிகளவான உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை நாங்கள் கைப்பற்றுவோம். 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை கைப்பற்றியதை போன்று இம்முறையும் நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றுவோம்.தேசிய பொருளாதாரத்தை கைப்பற்ற வேண்டுமாயின் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். எமது ஆட்சியில்  கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்திகளுக்கு  விசேட திட்டங்களை முன்னெடுத்தோம். ஆகவே கிராமிய மக்கள் கிராமத்தின் அதிகாரத்தை மீண்டும் எமக்கு ஒப்படைப்பார்கள்.  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement