• May 10 2025

Thansita / May 10th 2025, 12:21 pm
image

வெசாக் வாரத்தை முன்னிட்டு நுவரெலியா நகர் முழுவதும் வெசாக் பந்தல்கள், தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது  பெளத்த விஹாரைகளில் மத வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் வெசாக் தின வாரத்தை முன்னிட்டு நுவரெலியா நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களின்  பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றும் பெரஹராவும் நடைபெறவுள்ளது.

 நுவரெலியாவில் நடைபெறும் தேசிய வெசாக் பண்டிகை முன்னிட்டு போக்குவரத்து நலன் கருதி நேற்று (09) முதல் கொழும்பில் இருந்து பதுளை வரையில்  விசேட  ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

எதிர்வரும் 13 ஆம் திகதி வரை குறித்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

நுவரெலியாவில் களைகட்டும் வெசாக் வாரம் வெசாக் வாரத்தை முன்னிட்டு நுவரெலியா நகர் முழுவதும் வெசாக் பந்தல்கள், தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது  பெளத்த விஹாரைகளில் மத வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அத்துடன் வெசாக் தின வாரத்தை முன்னிட்டு நுவரெலியா நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களின்  பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இதில் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றும் பெரஹராவும் நடைபெறவுள்ளது. நுவரெலியாவில் நடைபெறும் தேசிய வெசாக் பண்டிகை முன்னிட்டு போக்குவரத்து நலன் கருதி நேற்று (09) முதல் கொழும்பில் இருந்து பதுளை வரையில்  விசேட  ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.எதிர்வரும் 13 ஆம் திகதி வரை குறித்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement