• Nov 26 2024

கெஹலியவின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கியது வெலிக்கடை சிறைச்சாலை..!

Chithra / Feb 6th 2024, 8:55 am
image

 

வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை பெற்றுக் கொள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விடுத்திருந்த கோரிக்கைக்கு வெலிக்கடை சிறைச்சாலை அனுமதி வழங்கியுள்ளது.

அவ்வாறான அனுமதியை வழங்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெலிக்கடை சிறைச்சாலைக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியர்களின் சிபாரிசுக்கு அமைய, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதன்படி அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கெஹலியவின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கியது வெலிக்கடை சிறைச்சாலை.  வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை பெற்றுக் கொள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விடுத்திருந்த கோரிக்கைக்கு வெலிக்கடை சிறைச்சாலை அனுமதி வழங்கியுள்ளது.அவ்வாறான அனுமதியை வழங்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெலிக்கடை சிறைச்சாலைக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியர்களின் சிபாரிசுக்கு அமைய, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.இதன்படி அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement